சொல்வனம்-இலக்கியக்கட்டுரை

சொல்வனம்
.: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!
முகப்பு
தொடர்புக்கு
தொடர்கள்
மறுவினை

முகப்பு » அஞ்சலி, இலக்கிய விமர்சனம்
ஜெயகாந்தன்-ஓங்கி ஒலிக்கும் யதார்த்தத்தின் குரல்
மோனிகா மாறன் | இதழ் 127 | 26-04-2015|  அச்சிடு

image

தமிழ் இலக்கிய உலகின் எழுத்தாளனென்றால் கம்பீரமும்,அறச்சீற்றமும் கொண்டவன் என்ற அடையாளத்தை உண்டாக்கிய ஜெகெயின் மறைவு ஊடகங்களில் இலக்கியம் பற்றிய பேச்சிற்கு வழிகோலியிருக்கிறது.

சமூகத்தின் மீதும், மனிதத்தின் மீதும் நம்பிக்கையை விதைத்த அவரின் உரத்த குரல் ஒரு தலைமுறையையே உலுக்கியது. இளவரசிகளின் கன்னி மாடங்களையும், குதிரையில் பறந்த வீரன்களையும், அலுவலகம் செல்லும் அம்மாஞ்சிகளையும், ஏழ்மையில் வெம்பிப்போன நடுத்தர மக்களையும் மட்டுமே சுற்றியிருந்த இலக்கியத்தை , யதார்த்த வாழ்வின் உன்னதங்களை எளிய மக்களின் மேன்மைகளைப் பற்றி பேச வைத்தவர் ஜெயகாந்தன். ரிக்ஷாக்காரர்களும்,சித்தாள்களும்,வண்டி ஓட்டிகளும்,விபச்சாரிகளும்,திருடர்களும் மட்டுமின்றி சுந்தர கனபாடிகளும்,என்ன செய்யட்டும் என்று கேட்கும் மாமிகளும் அவர் எழுத்துகளில் உண்மையாய் வந்தார்கள். யதார்த்தத்தை ஓங்கி ஒலிக்கும் குரல்களாக அவர்கள் பேசினார்கள்.

காலங்காலமாய் சமூகத்தில் வைத்திருந்த சம்பிரதாயமான அசட்டுத் தனங்களை ,போகிற போக்கில் இவையெல்லாம் எதுவுமில்லை,வாழ்க்கை எல்லாவற்றிற்கும் பதில் கூறும் என்று உடைத்தார். பெண்களின் மேன்மையை

“பெண் என்பவள் அவளே சில வேளைகளில் எண்ணி மயங்குவது போல் தனிப்பிறவியல்ல, சமூகத்தின் அங்கமே”

என்றார்.

கம்யூனிசத்தையும் ஆன்மீகத்தையும் ஒரே தளத்தில் இணைக்க எண்ணினார். இந்திய மரபின் மேன்மைகளை உணர்த்தினார். தனிமனித சுதந்திரம் பற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பே உரத்துப்பேசினார். ஏனென்றால் அக்காலகட்டத்தில் மனிதர்கள் சமூகத்தில், சாதியில், குழுக்களில் கட்டுப்பட்டே இருந்தனர். சமூகத்தின் பார்வையில் தனிமனித ஒழுக்கங்களும்,கட்டுப் பாடுகளும் எத்தனை அபத்தமான கோணத்தில் நோக்கப்படுகின்றன என ஓங்கித் தலையிலடித்துக் கூறினார். கம்யூனிச சித்தாந்தங்களையும்,காந்தியின் எளிமையையும் ஒன்றாகக் கொண்டவராகவே வாழ்ந்தார்.

ஜெயகாந்தனைப் பற்றிக் கூறப்படும் விமர்சனங்களில் அவர் சங்கர மடத்தை இறுதியில் ஆதரித்தார் என்பதும்,வர்ணாசிரமத்தையும், இந்துத்துவாவையும் ஆதரித்தார் என்பதும். பாரத தேசத்தின் மரபை ,தொன்மத்தை அது உலகின் எந்த மரபையும் விட உன்னதமானது என்றே வலியுறுத்தினார். ஜெயஜெய சங்கர நூலிலும் அவர் வலியுறுத்தியது அடிப்படையான அறத்தை, மானிட தர்மங்களையே. தன்னை ஒதுங்கிப்போ, ஒதுங்கிப்போ என்று கூறிய சமூகத்தைப் பார்த்து ஆதியின் குரலாக அவர் கூறும் என்னை விலகிப்போகச் சொல்லுமிடத்திற்கு நான் வரமாட்டேன் என்பது அவன் மனமேன்மையை வலியுறுத்துவதே.

பொய்யான பகுத்தறிவு வாதங்களையே அவர் எதிர்த்தார்.மேம்போக்கான வாதங்களை அவரைப்போன்றதொரு கம்யூனிஸ்ட்டால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் வலியுறுத்திய நாத்திக வாத அபத்தத்தை இன்று தமிழ் மண்ணில் கண்கூடாகக்  காண்கிறோம். பகுத்தறிவை மக்களைச் சிந்திக்கச் செய்யாமல் சும்மா மேடைகளில் அபத்தமாகப் பேசியதன் விளைவே இன்றைய சாதீய மோதல்களுக்கும், கீழ்மைகளுக்கும் காரணம். இதைத் தான் ஜெகெ தனித்து நின்று வலியுறுத்தினார்.

நம் மரபின் யோகங்கள்,சித்தர்களின் ஞானத் தேடல்கள் பற்றிய அவரின் உண்மையான மதிப்பீடுகள் மிகச்சரியானவையே. இன்றைய கார்ப்பரேட் உலகம் தியானம்,யோகா என்றெல்லாம் செல்வதைத் தான் அவர் அன்றே ஓங்கூர்ச்சாமி போன்ற உண்மைத் துறவிகளின் பாத்திரங்கள் மூலம் வலியுறுத்தினார். அப்படி காலங்களைத் தாண்டி சிந்திப்பவனே உண்மையான படைப்பாளி.
அவரின் சில தனிமனித பலவீனங்களைச் சொல்பவர்கள் அவரின் ஒரு படைப்பையேனும் உணர்ந்து உள் வாங்கியிருக்கமாட்டார்கள். இத்தனை சிந்தனை மனமும், படைப்பூக்கமும் கொண்ட ஒரு கலைஞனின் மனநிலைக்கு அவையெல்லாம் தேவைப்பட்டிருக்கலாம். அவரே கூறியது போல படைப்பாளியின் படைப்பைப் பாருங்கள், அவன் அந்தரங்கத்திற்குள் எட்டிப் பார்க்க எண்ணாதீர்கள் என்பதே நிதர்சனம். அவர் படைப்புகளில் பிரச்சாரப் போக்கு இருக்கலாம், சில தட்டையான சொல்லாடல்கள் இருக்கலாம்.ஆனால் இலக்கிய அனுபவங்களை அவை என்றும் தருபவையே.

ஒரு சன்னலில் அமர்ந்து உலகை நோக்கும் பெண்ணின் மனமும், ஆணின் உண்மைத் துணையை நாடும் அபலைப் பெண்ணின் மன ஓட்டங்களும், அப்புவாக ஒரு தலைமுறையின் வீழ்ச்சியை நோக்கும் சிறுவனின் உள்ளமாக, எல்லோராலும் விரட்டப்படும் திருட்டுமுழி சோசப்பின் அசட்டுச்சிரிப்பாக, உலகின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமான ஹென்றியின் உலகமாக, பெண்களே உங்களை இராமன்களும், இராவணன்களும் அடிமை கொள்கிறார்கள், பொருளாதார விடுதலை என்ற பெயரில் சம்பாதித்தளிக்கும் எந்திரங்களாகவே மாற்றுகிறார்கள் எனச் சீதாவின் உள்ளமாக, வீட்டைவிட்டு இமயமலைக்கு ஓடிப்போக எண்ணும் சோமு நாவல்பழம் தின்ன ஆசை கொள்வதும், பேபியைக் குழந்தையாகவே நோக்கும் துரைக்கண்ணுவின் பாசமும், மாமாவையோ, அம்மாவையோ யாரும் டைவர்ஸ் பண்றதில்ல, புருஷன் மட்டுந்தான் டைவர்ஸ் பண்ணாலும் வேற ஒண்ணத் தேட வைக்கிற உறவு, எனக்கு புருஷன் இல்லாததால வேற எந்த உறவுமே இல்ல என்ற கங்காவின் தனிமையையும், ரோஜாச் செடியிடம் கூட நிறைவடையும் கல்யாணியின் உயர்வும், இடுகாட்டின் அக்னியை நோக்கும் ரிஷிமூலம் கதாநாயகனின் உளச்சிக்கல்களுமாய் அவர் படைப்புகள் அளிக்கும் அந்தரங்க அனுபவங்களே உண்மையான இலக்கிய வெற்றி.

” காதல் என்ற பெயராலும்,கணவன்,தந்தை என்ற பெயராலும் உங்களை மதிக்கத் தெரியாத இவர்களிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள். மண்ணோடும்,தெய்வத்தோடும் வணங்கி லட்சுமிகரமாக்கித் தொழுவார்கள். நேரம் வரும்போது தெரியும் இந்த கசாப்புக்காரர்களின் காதல் லட்சணம்.”

இத்தகையத் தெளிவான வாதங்கள் இன்றைய மாய ஊடக காலகட்டத்தில்,பாலியல் ஈர்ப்புகளால் அலைக்கழிக்கப்படும் இளைஞர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறதல்லவா? ஆம் அது தான் இலக்கியவாதியின் வெற்றி.

காலங்களைக் கடந்து நிற்கும் அக்கலைஞனின் படைப்புகள் இன்றைய தலைமுறைக்குச் சரியான முறையில் அடையாளம் காட்டப் படுவதே அவருக்கு அளிக்கும் அஞ்சலி.


June 7, 2009
In “இலக்கியம்”
இந்தியக் கவிதைகள் – தெலுங்கு, மராத்தி
October 15, 2013
In “இந்தியக் கவிதைகள்”
நினைவுப் பிழைதானோ!
October

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

Name
*

Email
*

Website

CAPTCHA *

1 + six =

* Copy This Password *

* Type Or Paste Password Here *

Comment

You may use these HTML tags and attributes:

Notify me of follow-up comments by email.

Notify me of new posts by email.

பிற ஆக்கங்கள் ‘அஞ்சலி’

ஜெயகாந்தன்-ஓங்கி ஒலிக்கும் யதார்த்தத்தின் குரல்

ஒரு தமிழ் எழுத்தாளரின் இறுதிச் சடங்கு – (ஜெயகாந்தன் அஞ்சலி)

லீ குவான் இயூவுக்கு அஞ்சலி

டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் – அஞ்சலிக்குறிப்பு

பிற ஆக்கங்கள் ‘இலக்கிய விமர்சனம்’

ஜெயகாந்தன்-ஓங்கி ஒலிக்கும் யதார்த்தத்தின் குரல்

காலப் பெருவெளி – கவிதை நூல் விமர்சனம்

அலகுடை நீலழவர் – பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப் பட்சி’

சுமித்ரா – அந்தம் இல் மனம்

சிறப்பிதழ்கள்

இசை – 15ஆம் இதழ்

தி. ஜானகிராமன் – ஐம்பதாம் இதழ்

க.நா.சு – 75ஆம் இதழ்

ஐந்தாம் ஆண்டு – 91ஆம் இதழ்

அசோகமித்திரன் – நூறாவது இதழ்

சிறுகதைச் சிறப்பிதழ் – 107 & 108ஆம் இதழ்

பெண்கள் சிறப்பிதழ் – 115ஆம் இதழ்

Email Subscriptions

Enter your email address:

Follow Solvanam @ FeedBurner Click here

முந்தைய பதிவுகளில் இருந்து

மகரந்தம்

[குறிப்பு: ஒவ்வொரு பத்தியிலும் நீல நிறச் சொற்கள், அடிக்குறியிட்டவற்றில், ச…

[ read more ]

வாசகர் மறுவினைகள்!

உங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.

உரிமைத்துறப்பு

சொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்

editor@solvanam.com

என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பிவைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.

படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

பழங்குடிக் கொண்டாட்டம்

</em

Advertisements

ஜெயகாந்தன் நீங்காத நினைவுகள்2-பிரின்ஸ் நீல்

image

சபையில் அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்திற்குப் பின்னால் அவர் பைப்பில் புகைப்பது போன்ற பெரிய படம் ஒன்று இருக்கும்.சபையில் வந்து அமர்கின்ற அனைவரும் அவரது ஹிப்நாட்டிக் பார்வையாலே ஈர்க்கப் படுவது வாடிக்கையான ஒன்று.அவரது பேச்சிலும்,செய்கையிலும் மற்றவர்களை ‘அரிதுயில்’ கொள்ளச் செய்துவிடுவார்.அவ்வாறு அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நான் அரிதுயிலில் ஆழ்ந்திருக்கிறேன்.இது மற்ற நண்பர்கள் அனுபவத்திலும் உண்டு.அந்த ‘அரிதுயில்’ மற்றக் கவலைகளை மறக்கடித்துப் புதிய உற்சாகத்தை தரும்.
     ஒருமுறை சென்னையிலிருந்து ஊர்திரும்பும் போது 5000ரூபாயை பிக்பாக்கெட்டில் இழந்துவிட்டு வெறுங்கையாக ஆழ்வார்பேட்டைக்குத் திரும்பினேன்.என் கையில் 50 ரூபாய் கொடுத்து,”ஏய் இதைப் போய் சொர்ணத்திடம் சொல்லாதே.பாவம் அது பெண்பிள்ளைகள் குருவி மாதிரிச் சிறுகச் சேர்ப்பவர்கள்.மனம் சோர்ந்துவிடுவார்கள்”என்றார்.
     குடித்து,புகைத்து மகிழ்கின்ற மாலைப் பொழுதுகளில் அவரது ஆலமரம்,பரமுத்தன் குணங்குடி மஸ்தான் பாடல்கள் அனைவரையும் லயிக்கும்படிச் செய்யும்.
   வெளியூர் முகாமின்போது நீர் நிலைகளில்  நீராடுவதும்,பரந்த நிலவொளியில்  நடனமிடுவதும் அவருடன் நண்பர்கள் களித்திருக்கும் மாலைப் பொழுதுகள் மறக்கவொண்ணாதவை.
    ஆழ்வார்ப்பேட்டை சபையில் நடிகர்  ஷ்ரீகாந்த்,திருச்சி நண்பர் மோதி,சிவகாசி நண்பர் ராஜசபா என நிறைய பிரபலங்களைச் சந்தித்திருக்கிறேன்.எவரையும் அறிமுகம் செய்யும் மரபு அவர் சபையில் இல்லை.இயல்பாக நாமாக அறிமுகமாகிற வழிமுறையாக இருக்கும்.
      சபையில் இன்ன விவாதம் தான் நடக்கும் என்றில்லை.சினிமாவாக,அரசியலாக,சமூக மாற்றங்களாக,குடும்ப விஷயங்களாக பலதரப்பட்ட பேச்சாக இருக்கும்.அநேகமாக அவர் தான் பேசிக் கொண்டே இருப்பார்.ஆனால் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பயனுடையதாக இருக்கும்.
      பாரதியின் மீது மிகுந்த பற்றுகொண்ட ஜெயகாந்தன் கரும்புத் தோட்டத்திலே பாடலைப் பாடுகையில் உருகாத உள்ளங்கள் இல்லை.
        அவரின் மறைவுச் செய்தியால் துயருற்றேன்.என் சார்பாக என் மகன் ஞானதினகரன் அவர் இறதிச்சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினான்.   
       ஜேகே என்னுடனும்,எங்கள் குடும்பத்துடனும் நீங்காத நினைவுகளில் என்றும் வாழ்கிறார்.
      இன்ஷா அல்லாஹ்!!
                        ஞா.பிரின்ஸ் நீல்
                          ஜமுனாமரத்தூர்.

மோனிகா மாறன்

ஜெயகாந்தன் -நீங்காத நினைவுகள்-1பிரின்ஸ் நீல்

image

“நினைவுகள் சாவதில்லை
நிலவுலகப் பாதையிலே”
     இன்று ஏப்ரல் 24’ஜெயகாந்தன் பிறந்த தினம்.ஒவ்வொரு ஆண்டும் தொலைபேசியில் ஜேகேவிற்கு வாழ்த்து தெரிவித்த எனக்கு இந்த ஆண்டு வெறுமையின் நாள்.
       ஜேகேயின் சஹ்ருதயர்களில் நானும் ஒருவன்.ஜவ்வாது மலை,ஜமுனாமரத்தூரில்  மேநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.
      1972ல செப்டம்பரில் பாரதி நினைவு தினத்தில் எனது சிறிய மலைக்கிராமப் பள்ளியில் தேசியக்கொடியேற்றி ஜேகே மாணவர்களிடையே உரையாற்றினார்.அன்று முதல் அவரின் நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவனானேன்.நீல்,நீல் என என்னை அன்புடன் அழைப்பார்.என்னுடன் மட்டுமின்றி என் குடும்பத்தினரிடமும் நெருக்கம் காட்டினார்.
     சென்னையை விட்டு வெகு தொலைவில் உள்ள இம்மலைக்கு எத்தனையோ முறை வந்து தங்கியிருக்கிறார் என்றால் அவர் நட்பின் ஆழத்திற்கு எல்லை எது?
      எனக்கு மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாய்பேச இயலா,நடமாட முடியாத நல்ல மனவளர்ச்சியுடனிருந்த ஸ்பென்சர் என்ற மகன் 23 வயது வரை வீட்டிலிருந்தான்.ஜெயகாந்தன் என் வீட்டிற்கு வருகை தரும்போதெல்லாம் அவனுடன் அதிக நேரம் செலவிட்டு மௌனத்திலேயே அவனுடன்  உறவாடிய காட்சிகள் மறக்க இயலாதவை!
         “நீல் இறைவன் உன்னால் தான் இவனைக் காப்பாற்ற முடியும் என்பதால் தான் உனக்கு இந்த சோதனையைக் கொடுத்திருக்கிறார்.மற்றபடி எங்களால் இந்த சோதனையைத் தாங்க முடியாது”என்பார்.
ஸ்பென்சர் மட்டுமின்றி எந்த லௌகிக விஷயங்களைப் பேசினாலும் தத்துவ ரீதியாக அற்புதமாகப் பேசுவார்.
     ஆழ்வார்ப்பேட்டை மடத்தில் அவர் “சபை”யில் எப்பொழுது சென்னை சென்றாலும் ஆஜராகிவிடுவேன்.எத்தனை தடவை சென்றாலும் “வாங்க நீல்”என்ற அவர் சிரிப்பே வரவேற்கும்.வீட்டில் அனைவரையும்,குறிப்பாக ஸ்பென்சரையும் பற்றி நினைவாக விசாரிப்பார்.
    1997ல் ஸ்பென்சர் திடீரென மறைந்த போது ‘ஆண்டவன் உன் பாரத்தை நீக்கிவிட்டான்”என ஆறுதலளித்தார்.
        ஜமுனாமரத்தூர் வனவிடுதி,காவலூர் வன ஓய்வு விடுதி,புதூர்நாடு இல்லம் ,என் சொந்தவீடு என்று எல்லா இடங்களிலும் அவர் தங்கி இருந்ததை மற்க்க இயலாது.
         எனது ஊரில் முகாமிடும்போதெல்லாம் நண்பர்கள் சூழத்தான் வருவார்.திருப்பத்தூர் நண்பர்கள் பி.ச.குப்புசாமி,தண்டபாணி,வெங்கடாசலம்,மாணிக்கம்,ருணாச்சலம்,ஆறுமுகம்,வையவன் போன்றவர்களும்,கே.எஸ்.அருணாச்சலம்,ஓவியர் ஆதிமூலம்,துரைராஜ் இன்னும் அநேக நண்பர்களுடன் முகாமிடுவார்.
      அவ்வாறு தங்கும்பொழுதுகளில் தனக்கென பிரத்யோகமாக எந்த வசதியையும் தேடிக்கொள்ள மாட்டார்.அவருக்கென அசைவ உணவு தனியாகத் தயாரித்தால் ,ஒருபோதும் தனித்து உண்ணமாட்டார்.எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து பரிமாருங்கள் என்று கண்டிப்பாகச் சொல்லி விடுவார்.
     எந்த இடத்தில் சபை கூடினாலும் எல்லாரும் சமம் என்ற பொது உடமை சித்தாந்தத்தையே நிலைநாட்டுபவர்.
      நண்பர்களின் பிள்ளைகளின் திருமணத்திற்கு ஆர்வத்துடன் நண்பர்கள் பட்டாளமாகக் கலந்து கொள்வதில் ஜெயகாந்தனுக்கு விருப்பம் அதிகம்.நண்பர் பி.ச.குப்புசாமியின் மகன்,தண்டபாணியின் மகள்,ஆறுமுகத்தின் மகன் ஆகியோர் திருமணங்கள் திருப்பத்தூரிலும்,ஈரோட்டில் நண்பர் துரைராஜ் மகன்திருமணததிலும்,நான் ஜெயகாந்தனுடன் கலந்து கொண்டுள்ளேன்.
     எனது மூத்த மகள் பெப்ரீசியா திருமணத்திற்கு ஆம்பூரில்,மோனிகா மாறன் திருமணத்திற்கு வேலூரில்,இளைய மகள் சொர்ணப்ரியா திருமணத்திற்கு சென்னையில் ஜேகே கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.எனது மகன் ஞானதினகரன் திருமணத்தில் உடல்நலக்குறைவால் கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் ஜெகெ வாழ்த்துகளை அனுப்பியது மறக்க இயலாதது.
       இதில் குறிப்பிடப்பட வேண்டியது அப்பயணங்
கள் எதற்கும் நான் எந்த செலவும் செய்யவில்லை.உள்ளன்புடன் அவர் சொந்த செலவில் உறவினர் திருமணங்கள் போல வந்தார்.
      அவர் நண்பர்களுக்கு காண்பிக்கும் அன்பிற்கு இணை எதுவுமில்லை.
                    நினைவுகள் தொடரும்
                       ஞா.பிரின்ஸ் நீல்
                          ஜமுனாமரத்தூர்.

மோனிகா மாறன்

குமுதம்-வைரமுத்து -ஜெயகாந்தன்.

     

image

வைரமுத்து,குமுதம் ஜெயகாந்தன் மறைவில் விளம்பரம் தேடிக்கொண்ட கதை இவர்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியமளிக்காது.

குமுதம்
         தமிழ் இலக்கிய உலகின் சிறந்த படைப்பாளிக்கு அஞ்சலி செலுத்த நான்கு பக்கம் கூட ஒதுக்காத குமுதம்,நடிகை வீட்டு நாயைப் பற்றியும்,சினிமாக்காரர்களின் அந்தரங்கம் பற்றியும் சிறப்பிதழே வெளியிடும்.அவ்வளவு தான் அவர்கள் தரம்.
வைரமுத்து
         ரஜினிகாந்தும்,ஷங்கரும் தான் பெரிய அறிவாளிகளென்று சொல்லும் வைரமுத்துவுக்கு நோபல் பரிசு வேண்டுமாம்.இவர் இரண்டு நாவல்(!)எழுதிவிட்டால் பெரிய இலக்கியவாதியாகி விட்டாரா?அப்படியெனெறால் தமிழில் புதுமைப்பித்தனும்,ஜெயகாந்தனும்,தி்ஜானகிராமனும்,லாசாராவும்,கிராவும்,ஜெயமோகனும்,எஸ்இராமகிருஷ்ணனும்,சாருவும்,பூமணியும்,கநாசுவும்,சுராவும் இன்னும் பல உண்மை படைப்பாளிகளும் யார்?
      சினிமாவில் சங்க இலக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டால் இவர் தமிழறிஞரா?இதெல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து.
    வைரமுத்துவையும்,அவர் சார்ந்த திராவிட இயக்கங்களையும் கடுமையாக எதிர்த்தவர் ஜெயகாந்தன்.பிற்காலத்தில் கலைஞருடன் சில வார்த்தைகள் பேசியிருக்கலாம்.அவ்வளவு தான்.
       பொதுவாக யாரையும் வாசிக்காதவர் ஜெகெ.அவர் இவர் சிறுகதை என்று எழுதும் குப்பைகளைத் தொடர்ந்து வாசித்திருந்தால் இன்னும் மூன்று மாதம் முன்பே போய் சேர்ந்திருப்பார்.
        நிச்சயம் வைரமுத்து இதற்காக மன்னிப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.எந்த சூழலையும் தனக்குப் பயன்படுத்தும் கீழ்மைகளை மக்கள் அறியவேண்டும்.
 

மோனிகா மாறன்

வேற என்ன செய்யட்டும்?-சிறுகதை

>
>  

image

வேற என்ன செய்யட்டும்

>              வனீ”எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னும் எப்சியின் குரலில் அதே அன்பு.ஊர்ல இருந்து வந்திருக்கேன்டீ.
>         எப்சி என் கல்லூரி நாட்களையும்,விடுதி வாழ்வையும் ஆக்ரமித்த இனிய தோழி.என் இளமை நினைவுகள் அவளன்றி
> தனித்து எதுவுமில்லை.
>
>          பெரிதாக எந்த அனுபவங்களுமின்றி சின்னஞ்சிறு ஊரிலிருந்து நகரத்திற்குப் படிக்க வந்த எனக்கு கல்லூரியும் விடுதியும் மிரட்சியாக இருந்த பொழுதில் கண்களில் பொங்கும் உற்சாகத்துடன் கிடைத்த அறைத்தோழி எப்சி.
>            பதின் பருவ கனவுகள் எப்பொழுதும் பிரம்மாண்டமானவையே.எப்சி எனக்கு நிறைய ரசனைகளை சொல்லித்தந்தாள்..அவள் கனவுகள் எப்பொழுதும் உயரத்தில் பறப்பவையே.பறவைகளின் பூஞ்சிறகுகளையேத் தன் மனதாகக் கொண்டவள்.
>          தமிழ் சினிமாவின் காதலி,ஏன் சினிமாவையே சுவாசித்தாள் என்றே சொல்லலாம்.அவள் வாழ்வில் எல்லா தருணங்களையும் சினிமாவுடனே இணைத்துப் பார்த்தாள்.
>         திடீரென ஒரு விடுமுறை நாள் காலையில் தலைக்குக் குளித்து தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு சேலையை இழுத்துச் சொருகி  நெற்றியில் குங்குமம் விபூதி எல்லாம் இட்டுக்கொண்டு எங்களுக்கெல்லாம் ட்ரேயில் காபி கொண்டு தந்தாள்.இப்டி தானடீ ஹீரோயினுங்க எல்லாம் கல்யாணம் ஆனா வராளுங்க.
>            கஜோல் இப்டித்தான ஆடறா என்று ஜீன்ஸ் போட்டுக் கொண்டு பூப்பூக்கும் ஓசை என்று ஆடுவாள்.இந்த விஜய் ஏண்டி சிம்ரன் கூட நடிக்கறான் அக்கா மாறி இருக்கறா என்று கவலைப்படுவாள்.கவுண்டமணி விவேக் வடிவேலு எல்லாம் ஏதோ சொந்தக்காரங்க மாதிரி நெனைப்பா.லெக்சரர் சீரியசா பாடம் எடுக்கும்போது உலகத்த நெனச்சேன் சிரிச்சேன் என்று எங்களை சிரிக்க வைப்பாள்.வாயில எப்பவும் சினிமா டயலாக் தான்.
>       உங்க கடம உணர்ச்சிக்கு அளவே இல்லயா என்று கூட்டத்துல பிரின்சிபாலயே ஓட்டியவள்.எல்லாருக்கும் சினிமா சார்ந்தே பெயர் வைப்பாள்.
>               பள பள சுடிதார் போட் ட சீனியருக்கு வெற்றி கொடிகட்டு வடிவேலுவின் பெயரான சுடலை என்று வைத்திருந்தாள்.பணத்தை இஷ்டத்துக்கு செலவு பண்ணும் வினோவிற்கு அருணாச்சலம்,சித்தி சீரியல பாத்து அழும் பவித்ராவுக்கு மகாநதி கமல் பேர் கிருஷ்ணசுவாமி, நல்லா பவுடர் பூசி கண்ணுக்கு மை போட்டு வரும் சியாமளா மேம்க்கு மயில் என்று பெயர் வைத்து மேம் நீங்க சின்ன வயசுல  ஷரீதேவி மாதிரி தான இருந்தீங்க என்று தைரியமாய் கலாய்ப்பாள.
>        நான் படிச்சி முடிச்சி வேலைக்கெல்லாம் போக மாட்டேண்டீ,கல்யாணம் பண்ணிக்கிட்டு கொழந்த பெத்து வளத்துகிட்டு,சமையல் பண்ணி சாயங்காலம் அவர் ஆபீஸ்ல இருந்து வருவார்னு பாத்துகிட்டு ஜாலியா கவிதையா லைப் இருக்கனுண்டீ என்பாள்.
>             வயிற்றில் தலையணையை வைத்து கட்டிக்கொண்டு நடந்து காட்டுவாள்.பார்பி பொம்மையை மடியில் போட்டுக்கொண்டு ‘கற்பூற பொம்மை ஒன்று’எனத் தாலாட்டுப் பாடுவாள்.
>             எனக்கு நிறைய சொல்லித்தருவாள்.ஸ்கூல் பொண்ணு மாறி துப்பட்டாவை பின் பண்ணாத.சும்மா அப்டியே போடு.கை நெயில ரெண்டு ஓரத்துலயும் லேசா வெட்டு ,நல்ல ஓவல் ஷேப் வரும்.கலர் இல்லாத க்யூட்டக்ஸ் போடு.சும்மா ஊர்ப்புறம் மாறி நெயில் பாலிஷ்னு சொல்லாதடீ,அது க்யூட்டக்ஸ்.ஜட்டினு சொல்லாத இங்க சிரிப்பாளுங்க பேண்டீஸ்..சாரி கட்னா முன் பக்க ப்ளீட்ஸ லேசா காலால முன்னால உதைச்சிகிட்டே நட அப்ப தான் அழகா இருக்கும்.இது தான் மஸ்கரா, போட்டா கண்ணு அட்ராக்டிவ் ஆயிடும் இப்படி ஒவ்வொன்றாய் சொல்லித்தருவாள்.
>        பௌர்ணமி இரவுகளில் ஆஸ்டல் மொட்டை மாடியில படுத்துகிட்டு வைரமுத்து கவிதைய சொல்லுவா
>     உன்னோடு நானிருந்த
>      ஒவ்வொரு மணித்துளியும்
>      மரணப் படுக்கையிலும்  
>         மறக்காது  
>         கண்மணியே……
>        கடைசியில் அழுத  
>        கண்ணீர் கையில்
>         இன்னும் ஒட்டுதடி…
> எனக்கு வரவன் கூட இப்டிதான்டி நிலவொளியில எனககாக உருகனும் என்பாள்.
>           இவ்ளோ ரசனை இருந்தா காதல் வராம இருக்குமா? கல்லூரியின் கருப்பழகி வேறு.எங்கள் சீனியர் மேத்யூ அவளைப்பார்த்துமே இருவருக்கும் காதல்.காதலிப்பவர்களின் நண்பர்களாக இருப்பது உண்மையில் தமிழ் சினிமா நண்பர்களை விடக் கொடுமைானது.எப்சிக்கு நாளும் பொழுதும் மேத்யூ புராணம் தான்.
>              அவனும் பிரசாந்த் சாயலில் மீசையில்லாம நல்ல நிறமா இருப்பான்.இவ ஐஸ்வர்யா ராயாகவே மாறி ஹைர ஹைர ஹைரப்பா என்று டூயட் பாடுவாள்.எனக்கு மேத்யூ மாறியே நல்ல கலரா கொழந்த பொறக்கும் இல்லடீ என்பாள்.அம்மா தாயே ஆள விட்றீ என்று ஓடுவோம்.
>                 உணர்வுப்பூர்வமான காதல்.அவளின் காதல் அனுபவங்களை கற்பனைகளை அவள் சொல்லும் விதத்தில் நானே ஒரு கட்டத்தில் என்னடி  ஆச்சு என்று சுவாரசியமாய் கேட்குமளவிற்கு அவள் காதல் வளர்ந்தது.
>           அப்போது காதல் படங்களின் காலம். காதல் கோட்டை முதல் காதலுக்கு மரியாதை வரை எல்லா காதலர்கள் போலவும் வாழ எப்சி விரும்பினாள்.
>         காதல் கவிதைல பிரசாந்த் மாறி அவன் கவிதை சொல்லனுண்டீ என்பாள்.பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலை எத்தனை முறை கேட்டிருப்பாள் என்றே தெரியாது.
>           ரோஜா படத்துல வர மாதிரி ஹனிமூன் போகனும் என்பாள்,கல்யாணத்துக்குப் பின்னாடி தேவயானி மாறி தலை சீவிக்கட்டுமா என்பாள்.
>        சேது படத்த தியேட்டர்ல பாத்துட்டு இவ தேம்பித்தேம்பி அழுது மூஞ்சி வீங்கி வெளியில வந்தத பாத்த மேத்யூ நொந்துபோய்  இனிமேல் உன்ன சினிமாவுக்கே கூட்டிட்டு போகமாட்டேன் எனறு சொன்னது கல்லூரி முழுக்க ஒரு வாரம் சிரிப்பாய் ஓடியது.
>          மேத்யூவிற்கு கேம்பசில் வேலை கிடைத்ததுமே இருவரும் திருமணம் பற்றி திட்டமிட்டார்கள்.மேத்யூவை  வார இறுதிகளில் பெங்களூருக்கும் சென்னைக்குமாய் அலைய வைத்தாள்.மேத்யூவும் இவள் மீது பைத்தியமானான்.உருகினார்கள்.அலைபேசிகள் எல்லாருக்கும் அறிமுகமாகாத காலமது.எனவே எப்சி விடுதியின் போன் அருகிலேயே கிடப்பாள்.
>           எஸ் டீ டி யில் அவள் பேசும்பொது உடனிருக்கும் எனக்கே சில சமயம் பொறாமையாக இருக்கும்.அத்தனை சண்டைகள் கண்ணீர்கள் கொஞ்சல்கள்.
>        சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், பூ வாங்கித்தராமல் போய்விட்டான் என இவள் போனில் சண்டை போடவும் அடுத்த பஸ்ஸிலேயே பெங்களூரிலிருந்து வந்து ஆஸ்டலில் மல்லிகைப்பூவை இவள் கையில் கொடுத்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் ஐந்து மணி நேரம் பயணித்து திரும்பிப்போய் இரவு பதினோறு மணிக்கு ட்யூட்டிக்கு போனான் மேத்யூ.எப்சிக்கு சொல்லிச்சொல்லி தீரவில்லை.
>          எங்கள் படிப்பு முடிந்ததும் இருவரும் திருமணம் முடிந்து சிங்கப்பூர் சென்றனர்.அவ்வப்போது போனில் சம்பிரதாயமாய் பேசுவாள்.அங்கிருந்து அமெரிக்கா சென்றனர். நடுவில் இரு குழந்தைகள். எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகே இந்தியா வந்திருக்கிறாள்.
>          என்னடீ குண்டம்மா ஆயிட்ட என்றவாறே என்னை தழுவியவள் முன்பை விட ஒல்லியாக சோர்வாக
> இருந்தாள்.
>     கொஞ்ச நேரம் கழித்து கேட்டேன் எப்டி  இருக்க எப்சி படம் பாக்கறப்ப உன்னத்தாண்டி நினைப்பேன்.விஜய விட்டுட்டு சிவகார்த்திகேயனுக்கு மாறிட்டயா?ஊதா கலரு பாட்ட பாக்கறப்ப உன்னையும் மேத்யூவையும் தான் நெனச்சேன்.அப்டித்தானடி லவ் பண்ணீங்க.இப்ப அமெரிக்காவுலயே இருக்கீங்க நீ டூயட் பாட நெனச்ச எடத்துக்கெல்லாம் போனியா?
>           ………….
>      என்ன எப்சி அமைதியாயிட்ட.இப்ப சந்தானம் ஜோக்க சொல்லுவ அப்டிதான.நீ என்ன பாத்ததும் நண்பேன்டானு கட்டிக்குவன்னு நெனச்சேன்.
>          வனீ என்னை எறிட்டு பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தன.நான் சினிமாவே பாக்கறதில்லடீ.நம்பவே முடியல தான.மேத்யூவ ஆச ஆசயா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.மொதல்ல நல்லாத்தான் இருந்தான். ஆபீஸ் பார்ட்டிகள்ல குடிக்கத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமா ஹி பிகேம் அன் அடிக்ட்.குடின்னா சாதாரணமா நெனக்காத.காலைல எழுந்ததுமே வேணும்.குடிக்கலன்னா கையெல்லாம் ஒதறும்.யார் கால்ல வேணும்னாலும் விழுவான் காசு கேட்டு.குடிச்சிட்டு கண்டபடி என்னை பேசறது.அப்பறம் கொஞ்சறது.நானும் எவ்வளவோ போராடினேன்.அழுதேன்,சண்ட போட்டேன் ஏன் சாகறதுக்கு கூட போனேன்.ஒரு ரெண்டு நாள் சரியாகும். அவ்ளோதான்.
>         என் கவிதை கனவுகள் எல்லாமே  குடியால அழிஞ்சிடுச்சி.கல்லூரியில உற்சாகமா,அப்பாவியா,பெருங்காதலோட,உலகத்தையே நேசிச்சு,வானத்துலயே பறந்துகிட்டு இருந்த எப்சி செத்து போயிட்டா…
>           குழந்தைங்க தான் பாவம் அப்பான்னாலே மிரள ஆரம்பிச்சாங்க.மோசமான தகப்பனுக்கு பொறந்தது அதுங்க தலையெழுத்து.என்ன செய்யறது.நான் தான் அதுங்களஅரவணைச்சுக்கறேன்.அமெரிக்காவுல  வேலையும் போச்சி.எப்பவும் குடியிலயே இருந்தா யாரு வேல குடுப்பாங்க.பிரண்ட்ஸ்,சொந்தக்காரங்க எல்லாரும் இவன தவிர்க்க ஆரம்பிச்சாங்க.அதுக்கப்புறம் நான் தான் வேலைக்கு போயி சம்பாதிக்கிறேன்.குடிச்சிட்டு வீட்லயே இருக்கான்.ட்ரீட்மெண்ட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போனேன் கொஞ்ச நாள்தான்.எங்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டு  அன்ப அப்டியே பொழிவான்.அப்புறம் தொடங்கிடுது.எனக்கு எல்லாம் விட்டு போச்சுடி.அதல்லாம் மனசுல வலிமை வேணும்.அவன் மிருகமா மாறிட்டான்.என் வாழ்க்கையை என் கொழந்தைங்க எதிர்காலத்தஅழிச்சான்.
>          நான் அனுபவிக்க புதுசா இன்னும் எந்த துன்பமும் இல்ல.எத்தனையோ முறை மேத்யூ கண்ணெல்லாம் ரெட்டா வேர்வ  வழிய விஸ்கி ஸ்மெல்லோட கெட்ட வார்த்த பேசறப்ப மனசொடஞ்சி சீ இவனையா அப்டி லவ் பண்ணேன்,செத்துடலாம்னு போயிருக்கேன்.எங்கொழந்தைங்க ரெண்டும் அநாதயா நிக்குமேன்னு தான்டி இன்னும் இருக்கேன் எப்சியின் கண்ணீர் பெருகுகிறது.
>          ஒரு விதத்துல சொன்னா என்னோட சினிமா பயித்தியமே நிலம இப்டி மோசமாக காரணம்.அவன் மொத மொதல்ல குடிச்சிட்டு வந்தப்ப நான் அத பெரிசா எடுத்துக்கல சினிமால எல்லா  ஹீரோவும் தான குடிக்கறாங்க.அதுவும் ஒரு பேஷன்னு தான் நெனச்சேன்.அவன கிண்டல் தான் பண்ணேன்.
>         வனீ இப்ப நீ சொல்ற எந்த
> ஹீரோவும் எனக்குத் தெரியாது.படமெல்லாம் பாக்கற மாதிரியா என் லைப் இருக்கு.எப்பவாச்சும் பசங்க டிவி பாக்கறப்ப ,ஆபீஸ் டூர்ல படங்கள் பாக்கறதுண்டு.எல்லா படமுமே பார்ல தானடீ எடுக்கறான்.குடி குடி இதே தான, ஹீரோவுல இருந்து காமெடியன் வரைக்கும் பொண்ணுங்கள திட்றாங்க குடிக்கறாங்க இதுதான சக்சஸ் சினிமா.எனக்கு அப்டியே கொமட்டிட்டு வருது.எல்லாரையும் நிக்க வச்சி கேக்கனும் நீங்கல்லாம் குடிக்கறீங்க உங்க குடும்பம் என்னாகுண்டானு.
>         இங்க தான் அரசாங்கமே டாஸ்மாக்ல லாபம் காட்டுங்கன்னு டார்கெட்  வெக்கறாங்களாமே.
>        என்னால் பேசவே முடியவில்லை.
>            வனீ ஒரு காலத்துல என்னையும் மேத்யூவையும் பாத்து காலேஜே பொறாமப் பட்டாங்க.அப்டி என்ன லவ் பண்ணான்.இப்ப எனக்கு அவன் மூஞ்சிய பாக்கக்கூட புடிக்கல நாத்தம்,அழுக்கு,சாராய  வெறி….,எப்சி டார்லிங்னு போதையில அழுவான்.கழுத்த நெறிச்சி கொண்ணுடலாம்னு கூடத் தோணும்…
>           அவன் மொகத்த பாத்துட்டே வாழ்ந்துடலாம்னு கனவு கண்டேன்.அவன் எப்சிம்மா செல்லம்னு கொஞ்சனதுல மயங்கினேன்.இப்ப கண்ணுல போதையோட தேவ்டியானு கொழந்தைங்க முன்னாடி கத்தறப்போ செத்துப்போறேன்டீ.நரகம்னு பைபிள்ல வரும் அத உண்மையிலயே எனக்கு காட்டிட்டான்.
> .        டைவர்ஸ் பண்ண கூட முடிவு பண்ணேன்.எங்க மாமியார் அழுதாங்க நீயும் கை விட்டுட்டா அவன் செத்துடுவாம்மா.எப்டியாவது திருந்துவான்,கர்த்தர் கருணை காட்டுவார்னு கெஞ்சனாங்க.சரி எவ்ளோ  வரைக்கும் போகுதுன்னு பாப்போம்னு விட்டிருக்கேன்.இப்ப அவங்கூட பேசறதே இல்ல.பணம் மட்டும் தறேன்.
>          உன்ன மாறி பழைய பிரண்ட்ஸை பாக்கும்போது தான் அவன எத்தன எதிர்பார்ப்போட கல்யாணம் பண்ணியிருப்பேன்னு ஞாபகம் வருது.என்ன செய்யட்டும்….
>
>           என் பையன  நீயாவது அப்பா மாறி இல்லாம ஒழுங்கா  இருடான்னு சொல்றேன்.வேற என்ன செய்யட்டும் சொல்லு….

மோனிகா மாறன்

சஞ்சாரம்-அலைக்கழிப்பின் தனிமை

  

image

எஸ்.இராமகிருஷ்ணனின் சஞ்சாரம் மனித மனங்களின் சிதறல்களை,வாழ்வின் தவிர்க்க இயலா யதார்த்தத்திற்கும்,மனங்களின் எல்லைகளுக்குமிடையிலான போராட்டங்களைக் காண்பிக்கிறது.
       பக்கிரியின் கதை நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞனின் சுயமரியாதையை வெளிப்படுத்துகிறது.
      “மனுசன் அற்பப்புழு,
      இசைக்கு தாய்ப்பாலு நாதஸ்வரம்”
    கலையை நேசிக்கும் மனிதர்களின் மனதில் தான் இப்படிச் சொற்கள் உருவாகும்.
        எலுமிச்சை மணம் என்பது கடந்த காலத்தையும் நினைவுகளையும் இணைக்கும் மரணத்தை மாலிக்கபூருக்கு அளிக்கிறது லட்சய்யாவின் இசை.உண்மையில் எல்லா மனங்களின் ஆழங்களும் ஏதோ ஒரு வாசத்தில் மரணத்தை,காலங்களை நினைவூட்டும்.மணம் என்பதே இங்கு ஒரு குறியீடு தான்.
       கரிசல் மண்ணின் இசையை எஸ்.இராமகிருஷ்ணன் மிக யதார்த்தமாய்,உண்மையாய் பதிவு செய்திருக்கிறார்.
    ஊரோடிகள் என்னும் பறவைகள் பற்றிய பதிவுகள் மிக அற்புதமானவை.இலக்கியத்தில் உணரும் அந்தரங்கத் தருணங்கள் இப்படிப்பட்டவையே என்று நான் எண்ணுவதுண்டு.
   ‘மண்ணு வேணுமா,பொன்னு வேணுமா’என்று கேட்கப்படும் தருணம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு.நாம் தான் தேர்ந்தெடுக்க வேணும்.இங்கே மண் என்பது மழையை,வளமையைக் குறிப்பதாக உணர வைக்கிறார் எஸ்ரா.
     ஒரு சொட்டுக் கண்ணீரில் துளிர்க்கும் வேம்பு கரிசலின் அடையாளமாகக் கூறப்படும் தருணம் அற்புதமானது.
     செருப்புத் தைக்கும் கருப்பையாவிற்கு நாதஸ்வரம் கற்பிக்கும் கண்ணுசாமி நாயனகாரரும்,மாட்டிக் கொண்ட திருடனுக்கு ஏழு வீட்டுச் சோறு போடச் சொல்லும் கொண்டம்மாக் கிழவியும் கரிசல் மண்ணின் அடையாளங்களாய் புனைவில் சஞ்சரிக்கிறார்கள்.
      கச்சியப்ப சாமிகள்,ராசையா என்று ஒவ்வொருவரும் தனித்த ஆடையாளங்கள்.
       நாதஸ்வரம் கற்றுக் கொள்ள வரும் ஹாக்கின்ஸ்,அவனுடன் மடத்திலுள்ளவர்களின் உறவு என்று அழகாக எழுதுகிறார் எஸ்ரா.
      இறுதியில் அவன் லட்சுமியைத் திருமணம் செய்வது கவிதை…
   கொடுமுடியில் பக்கிரியும் ரெத்தினமும் தலைமறைவாக இருக்கையில் இருவருக்கும் உண்டாகும் மனத் தாங்கல்கள் யதார்த்தமானவை.
         பக்கிரி என்னும் மனிதனின் கதை மூலம் இசையை,நாதஸ்வரத்தை,மனித வாழ்வின் சஞ்சலமான தருணங்களை,கரிசல் மண்ணை உணரவைக்கிறது நாவல்.மிக அற்புதமான வாசிப் பனுபவம்.

     
        

மோனிகா மாறன்

டங்காமாரியா ஜெயகாந்தன்

      எங்க ஊர்ப் பக்கம் சொல் லுவாங்க ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம் அப்படின்னு.அது இந்த இணையப் போராளிகளுக்குத் தான்  போல.ஊர்ல ஒருத்தன் மாட்டக்கூடாது,.
          கருணாநிதியை ஓட்டுர மாறியே எல்லாரைப் பத்தியும் நினைக்கிறாங்க.
       ஊடகங்களில் ஜெகெயின் மறைவுக்கு அளிக்கப்படும் அஞ்சலிகளுக்கு இணையாகவே அவரைப் பற்றிய அவதூறுகளும் வருவதைப் பார்க்கிறேன்.பிரபலமான ஒருவரைப் பற்றிய விமர்சனங்கள் என்பது தவறில்லை.ஆனால் அதற்கு முன் அவரைப் பற்றித்தெரிந்து கொண்டு பேசலாமே.சும்மா ஏதாவது ஒரு வரியை யாராவது பார்வேட் செய்தால் அதை மட்டுமே  வைத்துப் பேசினால் இவர்கள் எல்லாம் தெரிந்தவர்களா?
      ஜெயகாந்தன் என்ன டங்காமாரியா.இவர்கள் எல்லாரும் பாடுவதற்கு.அவர் பெயரைச் சொல்லவே ஒரு தகுதி வேண்டும்.அவரது படைப்புகள் சிலவற்றையாவது முழுமையாக வாசித்து விட்டு பிறகு பேசட்டும்.
            “மனிதர்களையும்,சமூகத்தையும் நான் நேசிப்பதாலேயே  அவர்கள் அவலங்களையும் மேன்மைகளையும் ஒன்றாகவே எழுதுகிறேன்.”
    “தவறுகள் குற்றங்களல்ல”
“பெண் என்பவள் தானே எண்ணி மயங்குவது போலத் தனிப்பிறவியில்லை.அவளும் சமூகத்தின் அங்கமே,அவர்களைக் காப்பது சமூகத்தின் கடமை”
      “வாழ்வின் அவலங்களிலிருந்தே உன்னதங்கள் பிறக்கின்றன”
        “கடவுள் இல்லை என்பது எப்படி ஒரு நம்பிக்கையோ,அப்படித் தான் கடவுள் இருப்பது என்பதும்”
        வாழ்க்கை எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கும்.தேடிப் பாருங்கள்”
      

இப்படி அவர் கூறிய எத்தனையோ நல்லதை விட்டு ,எதையாவது கேனத் தனமாக அரட்டை அடிக்கிறார்கள்.
     நம்மூரில் சினிமா மட்டுமே எல்லாம்.ஒரு பாலச்சந்தருக்கோ,சிவாஜி கணேசனுக்கோ அவர்கள் மறைவில் தரப்பட்ட முக்கியத்துவத்தில்,நூறில் ஒரு பங்கு கூட ஞானபீடம் பெற்ற படைப்பாளிக்குத் தரப்படவில்லை.
     நாளைக்கே ஆச்சியோ,அய்யனோ,கலைவாணர்களோ(!) போனால் ஒட்டுமொத்த ஊடகங்களும் அய்யோ ஒப்பற்ற கலைஞனை இழந்தோமே என்று ஒப்பாரி வைப்பார்கள்.
       உண்மையான கலைஞனைப் பற்றி பேசும் ஒருசிலரையும் கலாய்க்கிறார்கள்.(தமிழ் நாட்டில் அம்மா,கலைஞர் ,புரட்சிஎன்ற வார்த்தகளெல்லாம் கெட்ட வார்த்தைகளாகிப் பல காலமாச்சு.தேவையான இடத்தில் கூடப் பயன்படுத்த முடியல)
         இணையப் புரட்சி விசிலடிச்சான்களே உங்கள் கடமை உணர்ச்சிகளைத் தாங்க முடியல.
       
    

மோனிகா

வெம்மை

செம்மண் புழுதியின் நிறமேந்தி
சீறிவரும் எரிமலையாய்
கரைகளைத்தாண்டி வரும் புதுவெள்ளம்,
கருத்த மேகத்தின்
கர்பத்தில் பிறந்த
ஒற்றைத்துளி வீழ்ந்து மறைகிறது
வெள்ளத்தில்……..
ஓங்காரமாய் ஒலிக்கிறது
ஒற்றைக்குயிலின் கீதம்
ஒரு மங்கிய மாலைப்பொழுதில்
காலமெனும் தேவதையின்
கடந்துவிட்ட சுவடுகளாய் பாறைகள்!!!
அவற்றை அரிக்க நித்தமும்
சீறும் நதி;
மலர்களை விட்டு
இலைகளில் தேனைத்தேடும் தேனீக்கள்!!
உயிரணுவை ,உயரத்தை,
தடிமனை ,தித்திப்பை ,
மரபணுக்குள்
பொத்தி வைத்து…
இறுதியில்
கனியுடன் விதையையும்
இழந்துவிட்ட மொட்டைமரங்கள்….
இத்தனைக்கும் இடையில்தான்
இருக்கிறது
அந்த குட்டி குடைக்காளான்
எத்தனையோ மாதங்கள் மண்ணுள்உயிர்பொத்தி
விழுந்த ஓர்துளியில் உயிர்பெற்று வெண்மையாய் தலைதூக்கி சிரிக்கிறது!!!

அந்த சின்னத்துளி சிரித்தது போல்
ஆங்காரங்களும்!
உளச்சிரிப்புகளும்!
உயிர்த்தீயின் வெம்மைகளும!
கண்ணீரின் காய்ந்த சுவடுகளும!
நெஞ்சினில் அறைந்த நினைவுகளும் ,
பசுமையாய் உலாவரும் உறவுகளும்
முதுகுக்கு பின் எழும் கேலிகளும்
முகத்தில் பேசும் பாசாங்குகளும்
அழிவு தானென்று அறிந்தும்
பூசும் அரிதாரங்களும்
வெறும் வெறுமைதான் உண்மையென
உணர்த்தும் முரட்டு அனுபவங்களும்
பாசத்தால் மூழ்கடிக்கும் உண்மை உறவுகளும்
ஓடிவந்து தோள்கொடுக்கும் தோழமையும்
காதலும் காமமும்
ஒருநாள் நிச்சயம் அடங்கி
பிரபஞ்சமெங்கும் பரவியுள்ள அந்த அந்தராத்மாவின்
சுயரூபம் விளங்கி
என்னுள் உறைந்திருக்கும்
அந்தச்

image

சிறுதுளிஉயிர்பெறும்
உயிர்த்து சிரிக்கும்….,
                -மோனிகா மாறன்
        

மோனிகா