ஜெயகாந்தன்-நினைவுகள் 1

      
image

இயற்கையிலும் மொழியிலும் இயல்பான ஈர்ப்பு கொண்ட ஓர் எளிய கிராமத்துச் சிறுமி வாழ்வின் உன்னதத்தை தரிசித்த மங்காத நினைவுகள்!!!
        தொலைக்காட்சிகளும் இணையமும் ஆக்ரமிக்காத காலம்.சிறுவர் படக்கதைகளும்,வார இதழ்களும் மரத்தடிகளும் அவள் பள்ளிக்கால விடுமுறைகளை மூழ்கடித்தன.பைபிளும்,பாடங்களும் அளிக்க முடியா முழுமை எங்கோ இருக்கிறது என உணர்ந்த அந்த வயதில் அவள் தந்தையின் குருவான மீசைக்காரரின் சிரிப்பும்,கண்களின் கூர்மையும் அவளை ஈர்த்தன.அவர் படத்தைப் பார்த்தே முதன்முதலில் அப்புத்தகத்தை தந்தையின் நூலகத்திலிருந்து பன்னிரண்டாம் வயதில் வாசித்தாள்.
       ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -ஜெயகாந்தன் .அவர் பெயர் பிறந்தது முதலே அவள் தந்தையின் சொற்களால்  காதில் ஒலித்திருந்தாலும் ,அன்று தான் அவளுக்கான உலகத்தைக் காண்பித்த அப்பெயர் அவளுள் நிலைத்தது.எத்தனை பாக்கியம் செய்தவள் அவள்.வாசித்த முதல் நூலே உலகின் ஆகச்சிறந்த செவ்வியல் படைப்புகளில் ஒன்று.தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளியின் கரம் பிடித்தே அவள் இலக்கிய வாசிப்பிற்குள் நுழைந்தாள்.
         ஹென்றியின் கண்கொண்டே அவள் உலகை தரிசித்தாள்.தான் வாழ்வில் அடைய வேண்டிய இலக்கு உண்மையும்,அறமும் சார்ந்த உளத்தேடலே என அறிந்து கொண்டாள்.அதன் பிறகே தேடித் தேடி இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினாள்.இந்திய மரபின் மீதும் ,தத்துவங்களின் மீதும் காந்தியின் மீதும் பாரதியின் மீதும் மாறாப் பற்று கொள்ள அவரது எழுத்துகளே அவளை வழிநடத்தின.
          தன் மானசீக குருவாக,மாபெரும் ஆளுமையாக அவரை மனதில் வணங்கினாள்.
      ஒரு கோடை விடுமுறையில் அவர்கள் வாழ்ந்த மலைப்பகுதிக்கு ஜேகே என்ற அவரும்,அவரது நண்பர்களும் இவள் தந்தையின் உபசரிப்பில் வந்து தங்கிய போதே முதன்முதலில் அவரைப் பார்த்தாள்.
      ஆம் அவருக்கும் அவரது குழுவிற்கும் காபி,தண்ணீர் என கொண்டு செல்லும் சிறுமியாகவே நின்று அந்த மாபெரும் இலக்கிய ஆளுமையை,எவருடனும் ஒப்பிட இயலா படைப்புலகின் சுயம்புவை தரிசித்தாள்.
           அன்று தொடங்கி இன்று வரை அவரின் எழுத்துகளையே வாழ்க்கையின் சாரமாய் கொண்டிருக்கிறாள்.நேற்றிரவு அவரின் மரணச் செய்தியைக் கண்ட கணத்தில் உளம் தடுமாறி நின்றாள்.
         சிந்தை முழுக்க அவர் நிறைய இந்நாள் செல்கிறது….
             -நினைவுகள் தொடரும்,
                 மோனிகா மாறன்.
        

Advertisements

2 thoughts on “ஜெயகாந்தன்-நினைவுகள் 1

  1. Pingback: ’ஜெகே; மாறன் மோனிகா

  2. Pingback: நினைவின் நதியில்- மோனிகா மாறன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s