ஜெயகாந்தன் நினைவுகள்-3 தென்னங்கீற்று ஊஞ்சலிலே!!!

       கே.கே.நகரில்  அவர் இல்லத்திற்கு ஒருமுறை அவள் தந்தையுடன் சென்றிருந்தாள்.அவள் பள்ளி இறுதியில் இருந்த நாட்கள்.ஜெகெயின் மணிவிழா மலரை வாசித்து ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தாள்.அவளைப் பார்த்தவுடன் ஜெகெ அதைப் பற்றி பேசினார்.அவள் எழுதிய கடிதத்தையும் பொருட்டாக எண்ணி அவர் பேசியதை அவள் உள்ளம் எப்படி மறக்கும். ஜெயசிம்ஹனையும்,தீபாவையும் அப்பொழுது தான் சந்தித்தாள்…

       கல்லூரி நாட்களில் அவர் எழுத்துகளுடனே இருந்தாள்.வாழ்விக்க வந்த மகாத்துமாவும்,கங்காவும்,கல்யாணியும்,அம்மாசிக் கிழவனும்,விளக்குச்சாமியும்,சாரங்கனும்,கோகிலாவும்,சினிமாவுக்குமாவுக்குப் போன கம்சலாவும்,யுகசந்தி பாட்டியும்,ஓங்கூர்ச்சாமியும்,சோசப்பும்,.,அவளுக்கு வாழ்க்கையின் உன்னதத்தைக் கற்பித்தனர்.வாழ்வில் விரும்பியதைச் செய்யும்  துணிவும்,உள்ளும் புறமும் ஒன்றாகவே இருக்கும் மாண்பும் அவளுக்கு அவர் எழுத்துகள் தந்தன.
          அற்பத்தனங்களை அகங்காரங்களால் எதிர் கொள்கிறேன் என அவர் கூறியதையே அவள் வேதமாகக் கொண்டாள்.குறுகிய மனங்களையும்,கீழான எழுத்துகளையும் உதறிவிட்டு வாழ்வின் உன்னதங்களைத் தேடி அடையும் தீரா வேட்கையை அவர் எழுத்துகளே அவளுக்குத் தந்தன.
             உற்சாகமும் ,மகிழ்ச்சியுமாக வாழ அவரே அவளுக்குச் சொன்னார்.புலம்பல்களையும்,பொறாமைகளையும் விலக்க  அவரே கற்பித்தார்.அவள் கல்லூரி விடுதியில் ஒன்பதாம் மாடி அறையில் இருந்தாள்.அவள் அறைக்கு நேர் கீழ் அறையிலிருந்து இவர்கள் அறையில் தொம் தொம்மென்று குதிக்கிறார்கள் என்று வார்டனுக்கு புகார் சென்றது.ஜெகெவைப் போல அவளும் அவள் நண்பிகளும் சோப்பங்கப்பா நடனம் ஆடிய சத்தமே அது.எத்தனை புகார் சென்றாலும் இறுதிவரை சோப்பங்கப்பா பா பா என்ற ஆட்டத்தை தடுக்க முடியவில்லை.
            அவள் ஆசிரியப் பயிற்சிக் கடலூரில் படித்த போது மஞ்சக்குப்பம் பேருந்தைப் பார்த்தே உவகை கொண்டிருக்கிறாள்.ராபர்ட் கிளைவ் கோட்டையையும்,கடலூர் மீனவக் குப்பங்களையும்,உப்பங்கழிகளையும்,வடலூர் வள்ளலார் மடத்தையும் கண்ட போதெல்லாம் நண்பர்களிடம் ஜெகெ பற்றியே பேசியிருந்தாள்.
         யோசித்துப் பார்க்கையில் அவள் கணவர் தமிழ் மாறனிடம் காதலித்த காலங்களில் கூட ஜெகெ பற்றி பேசியிருக்கிறாள் என்று இப்போது எண்ணுகையில் புன்னகைத்துக் கொள்கிறாள்.
           சில நேரங்களில் புத்தகமே அவள் வேதம் என்று ஆனது.அப்படி ஜெகெயின் எழுத்துகளில் மூழ்கினாள்.அவள் வாழ்வில் ஒரு நாளும் அவர் சிந்தனையின்றி இருந்ததில்லை.அவர் எழுத்துகளை நூறு சதவீதம் வாசித்திருக்கிறாள் எண்பதே அவள் அடைந்த பேருவகை.
             அவள் திருமணமும் ஜெயகாந்தன் தலைமையிலேயே நடந்தது.அவர் தன் நண்பர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் அது. நண்பர்கள் வீட்டின் எல்லா திருமணங்களுக்கும் வருவார்.
         ஒரு சாதாரண வாசகனாய் அறிமுகமாகிய அவள் தந்தையுடனான ஜெகெயின் உறவு அடுத்த தலைமுறையிலும் தொடர்வது அவரின் ஆளுமையின் மேன்மை.
எழுத்தாளர் வையவன்,எழத்தாளர்   பி.ச.குப்புசாமி,ஓவியர் ஆதிமூலம்,டாக்டர் பூங்குன்றன்,அமெரிக்க நண்பர் திரு அருணாச்சலம் ,திரு துரை,திரு.தேவபாரதி,என்று அவருடன் ஜவ்வாது மலைக்கு வந்த எத்தனையோ முக்கியமானவர்களை அவள் பார்த்ததும் அந்த நட்பின் விளைவே.
       மகாபாரதமும்,இராமாயணமும்,சித்தர் பாடல்களும்,இந்து மரபின் நீண்ட பாரம்பரியத்தின் உன்னதமும், ,தொன்மங்களும்,மெய்த்தேடலும் அவள் அறியவும்,உலக ரஷ்ய இலக்கியங்களையும் தேடவும் அவரே கற்பித்தார்.நவீன தமிழ் இலக்கியவாதிகளான ,எஸ்.இராமகிருஷ்ணன்,நாஞ்சில் நாடன் சுரா வரை அவள் வாசிக்கவும் அவரே காரணம்.திரு ஜெயமோகன் பற்றி அறிந்துகொண்டு,ஜெயகாந்தனுக்குப்பிறகு ஜெயமோகன் எழுத்துகளை அவள் ஆதர்சமாய் கொள்ளவும் ஜெயகாந்தனே அடிப்படை.
      அவள் உள்ளம் அவர் மரணத்தை ஏற்க இன்னும் காலம் வேண்டும்.
      இரண்டு நாட்களாய்
“தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் போதினிலே
சிட்டுக்குருவி ஆடுது”…என்ற அவர் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

image

image

       அம்மாபெரும் எழுத்தாளுமைக்கு ஓர் எளிய வாசகியின் உளமார்ந்த அஞ்சலி!!!
                மோனிகா மாறன்
                      வேலூர்.

மோனிகா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s