ஜெயகாந்தன் நீங்காத நினைவுகள்2-பிரின்ஸ் நீல்

image

சபையில் அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்திற்குப் பின்னால் அவர் பைப்பில் புகைப்பது போன்ற பெரிய படம் ஒன்று இருக்கும்.சபையில் வந்து அமர்கின்ற அனைவரும் அவரது ஹிப்நாட்டிக் பார்வையாலே ஈர்க்கப் படுவது வாடிக்கையான ஒன்று.அவரது பேச்சிலும்,செய்கையிலும் மற்றவர்களை ‘அரிதுயில்’ கொள்ளச் செய்துவிடுவார்.அவ்வாறு அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நான் அரிதுயிலில் ஆழ்ந்திருக்கிறேன்.இது மற்ற நண்பர்கள் அனுபவத்திலும் உண்டு.அந்த ‘அரிதுயில்’ மற்றக் கவலைகளை மறக்கடித்துப் புதிய உற்சாகத்தை தரும்.
     ஒருமுறை சென்னையிலிருந்து ஊர்திரும்பும் போது 5000ரூபாயை பிக்பாக்கெட்டில் இழந்துவிட்டு வெறுங்கையாக ஆழ்வார்பேட்டைக்குத் திரும்பினேன்.என் கையில் 50 ரூபாய் கொடுத்து,”ஏய் இதைப் போய் சொர்ணத்திடம் சொல்லாதே.பாவம் அது பெண்பிள்ளைகள் குருவி மாதிரிச் சிறுகச் சேர்ப்பவர்கள்.மனம் சோர்ந்துவிடுவார்கள்”என்றார்.
     குடித்து,புகைத்து மகிழ்கின்ற மாலைப் பொழுதுகளில் அவரது ஆலமரம்,பரமுத்தன் குணங்குடி மஸ்தான் பாடல்கள் அனைவரையும் லயிக்கும்படிச் செய்யும்.
   வெளியூர் முகாமின்போது நீர் நிலைகளில்  நீராடுவதும்,பரந்த நிலவொளியில்  நடனமிடுவதும் அவருடன் நண்பர்கள் களித்திருக்கும் மாலைப் பொழுதுகள் மறக்கவொண்ணாதவை.
    ஆழ்வார்ப்பேட்டை சபையில் நடிகர்  ஷ்ரீகாந்த்,திருச்சி நண்பர் மோதி,சிவகாசி நண்பர் ராஜசபா என நிறைய பிரபலங்களைச் சந்தித்திருக்கிறேன்.எவரையும் அறிமுகம் செய்யும் மரபு அவர் சபையில் இல்லை.இயல்பாக நாமாக அறிமுகமாகிற வழிமுறையாக இருக்கும்.
      சபையில் இன்ன விவாதம் தான் நடக்கும் என்றில்லை.சினிமாவாக,அரசியலாக,சமூக மாற்றங்களாக,குடும்ப விஷயங்களாக பலதரப்பட்ட பேச்சாக இருக்கும்.அநேகமாக அவர் தான் பேசிக் கொண்டே இருப்பார்.ஆனால் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பயனுடையதாக இருக்கும்.
      பாரதியின் மீது மிகுந்த பற்றுகொண்ட ஜெயகாந்தன் கரும்புத் தோட்டத்திலே பாடலைப் பாடுகையில் உருகாத உள்ளங்கள் இல்லை.
        அவரின் மறைவுச் செய்தியால் துயருற்றேன்.என் சார்பாக என் மகன் ஞானதினகரன் அவர் இறதிச்சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினான்.   
       ஜேகே என்னுடனும்,எங்கள் குடும்பத்துடனும் நீங்காத நினைவுகளில் என்றும் வாழ்கிறார்.
      இன்ஷா அல்லாஹ்!!
                        ஞா.பிரின்ஸ் நீல்
                          ஜமுனாமரத்தூர்.

மோனிகா மாறன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s