வெசா-விமர்சனங்களின் குரல்

wpid-wp-1445593500776.jpegதமிழ் இலக்கிய விமர்சகர் மிக நுட்பமான ரசனை கொண்ட வெங்கட் சாமிநாதன் மறைந்து விட்டார்.அவர் விட்டுச்சென்றது எதை?சீரிய இலக்கிய மரபின் விமர்சன தளத்தை.

திராவிட இயக்க அரசியலை அவர்களின் போலித் தமிழ்ப்பற்றை,தமிழைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் மேடைகளில் அடுக்கு மொழிகளில் முழங்கும் கேடுகெட்ட அரசியலை.முற்போக்கு என்ற பெயரில் எழுதப்படும் காழ்ப்புணர்வுகளை.மரபினை குருட்டுத் தனமாக வழிபடுவதை.கூறிய அறிவு கொண்ட எவருக்கும் அவரது எண்ணங்கள் உற்சாகத்தையே அளிக்கும்.நம் சமூகத்தில் நிலவும் தவறான புரிதல்களை அவர் எதிர்த்தார்.

82ம் வயதில் காலமான அவருக்கு அஞ்சலி.

மோனிகா மாறன்.  


Advertisements

வெண்முரசு

L              காண்டீபம்.

-மிதந்தலைபவனின் தேடல்

image

ஜெயமோகனின் வெண்முரசு நூல் வரிசையில் காண்டீபம் அர்ச்சுனன் பற்றிய தனித்தன்மை கொண்ட நாவல்.அர்ச்சுனன் தனியாக அலைந்து திரியும் வனவாசம் ஜெயமோகனின் எழுத்துகளில் உயிர்பெற்று புதிய உலகிற்கு வாசிப்பவரை கைபிடித்து அழைத்துச் செல்கிறது.
சுஜயன் எனும் அரசகுல மைந்தனுக்கு மாலினியால் கூறப்படும் அர்ச்சுனனின் வீர வரலாறாகத் தொடங்குவது முதலில் செல்வது நாக உலகிற்கு.காலங்கள் இடம் பொருளற்று நம்மை அலையவைக்கும் ஜெயின் வர்ணணைகள் ஒவ்வொன்றும் புதிது புதிதாய் முளைக்கின்றன.நாகர்களின் கானகத்தில் அர்ச்சினன் காணும் விருட்சங்களும் அருவிகளும் நீர்ப்பரப்புகளும் நம் உடலால் உணரக்கூடிய மெய்நிகராக எழுதப்பட்டுள்ளன.உலூபி எனும் நாக கன்னிகையுடனான பார்த்தனின் உறவு காதல் பிரேமம் என்ற வரையரைகளையெல்லாம் உடைத்து பூச்சுகளற்ற பாவனைகளற்ற தூய பிணைப்பினை மிக இயல்பாக காண்பிக்கிறது.அவளை விலகி அவன் ஓடினாலும் உண்மையில் இன்னும் இன்னும் அவளை நெருங்கும் முரண்பட்ட நிலையை அடர் கானகத்தில் பெய்யும் மழையுடன் வாசிக்கையில் நானும் அவ்விடத்தில் நனைந்து உரு மாறுவதாகவே உணர்ந்தேன்.உலூபி அர்ச்சுனன் கதை தனிப்பட்ட நாவலாகவே வெளிவரலாம்.” காடு” நாவலின் நீலியின் வடிவாகவே  உலூபியையும் இடும்பியையும் கொள்ளலாம்.காட்டில் இயல்பாக. செயற்கை நாணங்களற்று,எதிர்பார்ப்புகளற்று உண்டாகும் இயற்கையான பெண்ணின் குணங்களுடன் காணும் இக்கதை மிக அற்புதமானது.

image

நாகர்களின் உலகில் அர்ச்சுனன் சென்று மூதன்னையரால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் அங்கு நடைபெறும் சடங்குகளும் மாய உலகில் நாமிருப்பதாகத் தோன்றவைக்கின்றன.ஜெ எப்பொழுதும் வலுவூடடும் தொல்குடிகளின் அன்னையர் வழிபாடே இங்கும் முதன்மை.கொற்றவையிலிருந்து அவர் பெண் தெய்வங்களையே நம் பழங்குடி வழக்கில் தொன்மங்களில் போற்றப்படுவதையே மீண்டும் மீண்டும் பதிவிடுகிறார்.உண்மையில் நம் மரபில் பெண் இப்படி போற்றப்பட்டாளா இத்தனை அதிகாரமிக்கவளா என்று நான் அவருக்கு ஏற்கனவே எழுதியிருந்தேன்.அதற்கு பதிலும் கிடைத்தது.அவர் படைப்புகளின் தனித்தன்மையாக நான்  விரும்புவது தொன்மங்களின் தொடர்ச்சியான இத்தகைய கூறுகளைத் தான்.ஒரு படைப்பு செவ்வியல் தன்மையை அடைவது இத்தகைய அக உணர்வில் தன்னியல்பான மானுட நீட்சியில் தான் என்றே நான் கருதுகிறேன்.
அரவங்களின் ஆண் பெண் இருமைத் தன்மையை உலூபி அர்ச்சுனன் இருவரும் உணரும் அவர்களின் உறவு மிகச்சிறப்பான இணைப்பு.உலூபியின் மகனான அரவாணுக்குத் தரப்பட்ட அழகான வரவேற்பு இப்பகுதி.அவன் மகாபாரதப் போரிலே களப்பலி ஆக்கப்படுவதும் இளையோனாக அர்ச்சுனனின் எண்ணங்களில் காட்டப்படுகிறது.ஆணும் பெண்ணுமான ஈருடலின் உணர்வுகள் எத்தனை மேன்மையாக வெளிப்படுகின்றன.இது இன்றைய உலகில் உணரப்பட வேண்டிய தன்மை.அவர்களின் எண்ணங்களின் மிக உண்மையான எழுத்து.
அடுத்து அர்ச்சுனன் ஃபால்குனை என்னும் பெண்ணாகச் செல்லும் பயணம்.நிலக்காட்சிகளும் அவற்றின் துல்லிய வருணணைகளும் ஜெயமோகனுக்கு மிகச் சாதாரணம் என அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்கள்  நன்கு அறிவர். ஆனாலும் வெண்முரசின் ஒவ்வொரு இடங்களும் புதியவையே.மலை நிலங்களும் காடுகளும் பாதைகளும் பழங்குடிகளும் அவர்களின் வணிக யாத்திரைகளும் ஃபால்குனையுடன் நம்மை பயணிக்க வைக்கின்றன.
ஃபால்குனையின் பேரழகும் அவள் பாடலும் நடனங்களும் அவளின் ஒவ்வொரு அசைவும் நம்மை ஈர்க்கின்ற பொழுதில் அவளின் வில்லாற்றலை போர்த்திறத்தை வெளிப்படுத்தும் போர்.மணிப்புரியில் மரங்களில் மறைந்து அம்புகளால் நாகர்களை அவள் தனத்து வெல்லும் போர் ஒரு சிறந்த மாயாஜால வண்ணம்..   அர்ச்சுனன்  பெண்ணாகவும் ,சித்ராங்கதன் ஆணாகவும் உருக்கொண்டாலும் இருவரின் உள்ளுணர்வுகளும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கின்றன.மணிப்புரியின் லோக்தத் தடாகத்தின் மிதக்கும் தீவுகளில் இருவரும் போர்க்கலை பற்றி பேசும் இடம் நுட்பமானது.சுற்றிலும் மிதக்கும் தீவுகளும்,அவற்றின் அலையும் வேர்களும், மூங்கில் அரண்மனைகளும் கனவுலகை உண்டாக்குகின்றன.ஏரி நீரில் பொன்னொளிர் சூரிய ஒளியும் பறவைகளும் ஜெயமோகனின் எழுத்தில் நம்மை மூழ்க வைக்கின்றன.உளமார்ந்த வாசிப்பனுபவம்.நிலையற்று அலைபவனின் பயணம்.

மோனிகா மாறன்.

கவிதை-பதாகை

stay updated via rss

RECENT POSTS
#t1kavithai – வைத்தீஸ்வரன்
#t1kavithai – மோனிகா மாறன்
Uncategorized
0
கலைந்த நினைவு

முடிவிலா தார்ச்சாலை
மௌனத்தை ரீங்கரிக்கும் வண்டுகள்
சலனமற்ற நீர்ப்பரப்பு
பனியில் ஒளிரும் நிலாக்கிரணங்கள
இதம்தேட வைக்கும் வாடை
முழு நிலவொளியிலும்
தன்னை வெளிப்படுத்தா நிழல்கள்

உயிர்த்துடிக்கும் உன் அழுகை
என் இயலாமை
உதிரம்…வலி…
உயிர்ப்பிண்டமாய்
என்னுள்ளிருந்து உன்னை
சுரண்டி எடுத்த அக்கணம்
மயக்க ஊசியை மீறித் திறக்கும் என் விழிகளில்
உதிரத்தில் பொதிந்த உயிர்ச்சதை

எந்த நொடியில் நீ தோன்றினாய் என் கருவறையில்
மூன்றாம் மகவாய்
உனைக் கருவருக்க
ஆயிரம் காரணங்களைக் கூறினோம்
என் சொல்வேன் பதில் நான்
உலகறியா உன் சுவாசத்திற்கு
நீ மகனா? மகளா?
அறியவில்லை
நிச்சயம் உணர்கிறேன்
பிறந்திருந்தால்
சாய்ந்திருப்பேன் என் இறுதிநாட்களில் உன் தோள்களில்
அறுத்தெரிந்தாலும்
மரணம் வரை எனைத்
தொடரத்தான் போகிறாய்
ஏன் அம்மா என்ற
ஒற்றைச் சொல்லுடன்
என் இரவுகள் கரையத்தான் வேண்டும்
உன் உன்மத்த நினைவுகளுடன்
இனி வருமா என் கனவுகளில்
கவிதைகளும்…மழலைகளும்

-மோனிகா மாறன் ( இங்கிருந்து )

இயற்கையை அறிதலுக்கும் அறிவியலை அறிதலுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அழிவாக மட்டுமே இருக்கிறது. எந்தச் சிறு கண்டுபிடிப்பும், மிகப்பெரிய அழிவிற்கான பாதையை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. கிடைக்கும் எல்லா ஆய்வு முடிவுகளையும் அழிவை உருவாக்குவதாகவும், அதன் மீதான பயத்தின் மூலம் நம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழியாகவும்தான் நாம் பார்க்கிறோம் என நினைக்கிறேன். எல்லா சிறு ஜன்னல்களையும் வீட்டை அழிக்கும் வாய்ப்பாக மாற்றுவதில்தான் நாம் வெற்றிகளை உணர்கிறோம். பயம் மட்டுமே நம்மை இணைக்கிறது. அழிவு மட்டுமே நம்மை பயமுறுத்துகிறது.

அதிகாரத்தின் ஆதிவேர் எக்காலத்திலும் பெண்ணின் கருவறையாகவே இருக்கிறது. அதைப்பாதுகாப்பதும், அழிப்பதுவுமே நம் போர்தந்திரமாக எப்பொழுதும் இருக்கிறது. கருவறை மீதான போர்களே நம் அடையாளமாக உருவாக்கிக்கொள்கிறோம். கருவில் அழித்தல் ஒரு வெற்றியாகக் கொண்டாடப்படும் காலத்தின் தானே நாம் இருக்கிறோம்? மதங்களும் ஜாதிகளின் புனிதமும் சென்று சேரும் இடம் கருவறையின் புனிதமென்ற ஒற்றைக் குறிக்கோளை நோக்கித்தானே? பயம் என்பதை அழிவுதான் குடுக்குமென்றால், கருவறையின் அழிவுதானே நம் அதிகாரப்போர்களின் ஆதிவேராக இருக்கிறது? அரசியலில்லாத தளத்தில்கூட இறந்த மனிதர்களைவிட இறந்த குழந்தைகளும் கருக்களும்தானே நம்மை பதட்டம் கொள்ளச் செய்கிறது?

இழந்த கரு என்பது தந்தைக்கு எதிர்பார்த்திருந்த ஒரு சொல் மட்டுமே. அந்த உயிரைக்குறித்த ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே. பெண் அறியும் அசைவுகளை ஆண்கள் ஒருபோதும் உணரமுடிவதே இல்லை. முழுக்க தனக்குள் அசைந்த ஒரு உயிரின் முதல் குரலைக் கேட்காமலே போவதென்பதைவிட பெரிய துயரம் என்ன நிகழ்ந்துவிடக்கூடும்? சுரண்டலில் நேரத்தில் எழும் வலிகுறித்த கதைகளை அருகிருந்து கேட்ட நியாபங்கள் மூளையின் எதாவது ஓரத்தில் இருக்கிறதா? பெண்ணைத்தவிர யார் பேசமுடியும் இந்த வலியை? யார் உணரமுடியும்? உணரமுடியாத, உணரவாய்ப்பற்ற ஒரு கதை வேடிக்கைபார்ப்பவனாக இருப்பதின் துயரம் உங்களுக்கும் தெரியும்தானே?

About these ads

சொல்வனம்-சிறுகதை

சொல்வனம்
.: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!
முகப்பு
தொடர்புக்கு
தொடர்கள்
மறுவினை

முகப்பு » சிறுகதை
ரஞ்சனி
மோனிகா மாறன் | இதழ் 137 | 04-10-2015| அச்சிடு

நீலக்குழல் விளக்கொளி அறையெங்கும் பரவி இரவின் முழுமையை ரஞ்சனியின் மனதில் நிலைத்தது.கதவில் தொங்கிய மாவிலைகள் அசையும் நிழலையேப் பார்த்திருந்தாள். எழுந்து வெளியே போகமல் ஏன் இப்படியே இருக்கிறேனென்று எண்ணிக் கொள்கிறாள். சீனுவின் சீரான மூச்சொலி, குழந்தைகள் புரண்டு படுக்கும் அசைவு எல்லாவற்றையும் உணரமுடிகிறது. ஆனால் அவள் அப்பெரும் வெளியில் நிற்கிறாள். வெள்ளிநிறத்தில் மின்னும் மணலும், நிலவொளியில் அசைந்தோடும் தண்ணீரின் அசைவும், குளிர் வாடையும் அவள் மேனியில் படர்வதை நிஜம் போல் உணரமுடிகிறது. எழும்பி தாழ்ப்பாளைத் திறக்கிறாள். மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவற்றில் சாய்ந்து நின்றவாறிருக்கிறாள். பிறை நிலவொளி மங்கலாய் ஒளிரும் வெளிச்சத்தில் தோட்டத்தைப் பார்க்கிறாள். மருதாணி மரத்தின் பூக்கள் அசைகின்றன.

மகேஸ் சித்திக்கு எப்பவும் நிலா வெளிச்சத்துல உக்காரப் பிடிக்கும். வீட்டில் எல்லாரும் தூங்கியபிறகு பௌர்ணமி நிலவொளியில் அவள் முதன்முதலில் கரிய வடிவங்களாய் நிலவொளியில் மின்னும் இலைகள் அசைந்தாடும் மரங்களைப் பார்த்தவாறு ஆற்றங்கரைக்கு கொய்யாத்தோப்பு வழியில் நடந்தது சித்தியுடன் தான்… சித்தி பயமாயிருக்கு என்றவளை சேர்த்து அணைத்துக்கொண்டவள் ஏண்டி பயப்படற, நம்ம எடந்தான இந்த எடத்த ராத்திரியில பார்த்தா தான் நல்லாருக்கும் என்றாள்.

மொத மொதல்ல வருதுல்ல அதான் பாப்பா பயப்புடுது என்றாள் உடன் வந்த செந்து.

முழு நிலவொளியில் ஆற்றங்கரையில் அமர்ந்திருப்பது பேருவகையாய் இருந்தது. யாருமின்றித் தனியே அவ்விடம் மனதில் திகிலைத் தந்தாலும் உள்ளம் பரபரத்தது. அவ்வுணர்வு ரஞ்சனிக்கு எதையோ புதிதாய்த் தந்தது.பாறை இடுக்குகளிலிருந்து வளர்ந்திருந்த புற்களும், சிவந்த பூக்களும் வெள்ளியாய் துள்ளும் நீரும் அவளைக் கிறங்கச்செய்தன. ரஞ்சி இப்பிடியே வாழ்நாள் முழுக்க உக்கார்ந்து இந்த நிலாவப் பாத்துட்டே இருக்கனும்… அவள் விழிகளில் பளபளத்த கண்ணீர் கன்னங்களில் வழிகிறது.

சித்தி …அழறயா? கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.சித்தியின் மூக்குத்தியும்,கூந்தல் பிசிறுகளும் நிலவொளியில் ஒளிர்கின்றன. ஆற்றின் குதூகலமான துள்ளலையே பார்க்கிறாள். பாப்பா நீ இந்த ஊர்லயே இருக்காத வேற எங்கனா தூரமா கல்யாணங்கட்டிக்கிட்டுப் போயிடு…

ஏன் சித்தி

இங்க இருந்தா இந்த எடத்த மட்டுந்தான பாத்துக்கிட்டே இருக்கனும். எனக்கு காசி,இமய மலை எல்லாத்தையும் பாக்கனும், எந்த நோக்கமும் இல்லாம ரெண்டு பேரும் கைய கோத்துண்டு தெரியாத ஊரெல்லாம் வலம் வரணும்… இப்படி நெறய…. நீயாவது பாம்பேக்குப் போயிடு. என்ன மாதிரி ஏமாந்துடாத…. திரும்பி வருகையில் சித்தி எதுவுமே பேசவில்லை. கையில் ஒரு குச்சியை வச்சிக்கிட்டு செடிகளைஅடிச்சிட்டே வந்தா.

மகேஸ் சித்தி எப்பவும் அவளுடன் தான் நிறைய பேசுவாள். ரஞ்சி எம்மனசு புரியாம எல்லாரும் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்றாங்க. எங்கூட பேசக்கூட அவனுக்கு புடிக்கல, எப்பிடி போயி வாழறது? கையில் மருதாணியை இட்டுக்கொண்டே பேசுவாள்…

கிணற்றடியில் துணிதுவைக்கையில் இவள் பக்கத்தில் கருங்கல்லில் உட்கார்ந்திருப்பாள். சித்தியின் கதைகளெல்லாம் இவளுக்கு அவ்வளவு சுவாரசியமாயிருக்கும்.
மேயற மாட்ட நக்கற மாடு கெடுத்த கதையா அவளையும் உங்கதையக் கேக்க வைக்காத மகேஷ்… அம்மாவின் வசைகளுக்கு இருவரும் சிரிப்பார்கள்..

என்னடி சிரிப்பு?ஒழுங்கா சம்பாதிச்சி போடற ஆத்துக்காரனுக்கு ஆக்கிப்போட்டு அவங்கூட வாழ முடியல உனக்கு.இப்பிடி கதைய சொல்லிண்டே இருந்தா அவந்தான் என்ன பண்ணுவான்?

ஏன் சித்தி உனக்கும் சித்தாவுக்கும் சண்டையா? கல்லூரி விடுமுறையில் கேட்டாள்.

ரஞ்சி சித்தா நல்லவர் தான். ஆனா எனக்கு அவ்ளோ நல்லவன் வேணாம். சோறு மட்டுந்தானா. அவனுக்கு நான் பாடறது, பேசறது எதுவுமே புடிக்கல. அவன் சொல்றத மட்டும் கேக்கணும். எனக்குன்னு எதுவுமே இல்லயா?

திருமண வாழ்வு ரஞ்சனிக்கு நன்றாகவே இருந்தது. சீனு அவள்மீது அக்கறையாய்த் தானிருந்தான். இருவரும் சேர்ந்து ரசித்த மாலைப்பொழுதுகள் மனதை நிறைத்தன. கோவாவில் அவன் தோளில் சாய்ந்தவாறு கடற்கரையில் உலவிய நேரங்கள் வாழ்வை அவளுக்கு சொர்க்கமாக்கின…

மகேஸ் சித்தி மடியில் சாய்ந்தவாறு கேட்ட தங்கம்மா கங்கம்மா கதை அவள் நினைவுக்கு வரத்தொடங்கியது எப்போது ….

அக்கா தங்கச்சிய கும்புட்டிருக்கயா? அவங்க கத தெரியுமா?

பொன்னாக உருகும் சூரிய ஒளி சிவந்து பரவிவெண்ணிறம் கொள்வதும்,வானில் நீலம் கருக்கொள்வதையும் கண்கள் மலர பார்த்திருந்தாள். காலைப்பனியின் நடுக்கும் குளிர் வாடை, புற்களின் மீதெங்கும் பனித்திவலைகளில் சிதறும் வண்ணங்கள், பசும் நீரின் மீதெழும் ஆவிப்பரப்பு, தலையைத்தூக்கிப் பார்க்கும் நீர்க்கோழிகள், தரையில் படர்ந்திருக்கும் சின்னஞ்சிறு மலர்கள் ஊதா, மஞ்சள், நீலம், வெண்மை என அவற்றின் நிறங்கள், ஊசிப்புற்களின் கூம்பு வடிவ பூக்களில் அமரும் தும்பிகள், என ஏரிக்கரைப் புல்பரப்பு மனதை இதமாக்க ஈரம் வழிந்தோடிய கருங்கல்லின் மீது அமர்கிறாள் ரஞ்சனி. பனியின் குளுமை கல்லிலிருந்து உடலுக்குத் தாவுகிறது.முழங்கைகளைக் கட்டிக்கொள்கிறாள்.

பொன்னொளிரும் காலை வேளையில் அவ்விடத்தின் தனிமை,குளிர், நீரில் எழும்பும் சிற்றலைகள்,மரங்களிலிருந்து சொட்டும் திவலைகள் அவளை முழுமையாய் நிரப்பின. உயர்ந்து வளர்ந்திருந்த தைல மரங்களும், புளியமரங்களும், பசும் இலைகளெங்கும் ஈரத்தில் மினுக்கும் புங்க மரங்களும்,வெண்மையான அரசமரப் பரப்பும், அதில் ஊரும் எறும்புகளும், சிட் சிட்டென ஓசையெழுப்பும் குருவிகளும், முட்டை முட்டையாய் காய்களுடன் படர்ந்திருக்கும் காட்டாமணக்குப் புதர்களும், அவற்றைப் பிண்ணிப் படர்ந்திருக்கும், கொடிகளும், நீலவண்ண குடை வடிவப் பூக்களும் சிறிய அடர்ந்த செடிகளும் காலங்காலமாய் அவள் அமர்ந்திருப்பதைப் பார்க்கின்றன.நாணல்களும் செடிகளும் அசைந்தாடும் அசைவில் சிலந்தி வலைகளிலிருந்த பனித்துளிகள் ஏரி நீரில் சொட்டுகின்றன.புற்களில் படர்ந்துள்ள சிறிய மலர்களின் வண்ணங்களைப் பார்க்கிறாள்.அவற்றின் பூரிப்பு அவளுக்கு புன்னகையைத் தருகிறது.சிறிய மண் நிறப் பூச்சி நீண்ட கொம்புகளுடன் தாவிச்செல்கிறது. சாம்பல் வண்ண பட்டாம்பூச்சி வந்து அமர்கிறது. எறும்புகள், பசும் புழுக்கள், கரிய வண்டுகள், கம்பளிப் புழுக்கள், சிறு அவல் வடிவச் சிறகு கொண்ட பூச்சி என அங்கிருக்கும் உயிர்களின் உலகு அவளை ஈர்க்கிறது.

மனதின் குரோதம் வன்மம் … யார் மீது?எவர் மீது? தன் மீது தன் இயலாமை மீது. ஏன் மீறிச்செல்ல முடியவில்லை… ஒருக்காலும் முடியாது… கோபம் கொஞ்சங்கொஞ்சமாய் அவள் குருதியெங்கும்,சதையெங்கும் பரவி உச்சியை அழிக்குமா? மனப்பிறழ்வா?… அப்படியே அது மாறி மோகமாய், காதலாய் நேசமாய் உலகையே மூழ்கடிக்கும் பாசமாய் மாறுவது எனக்கு மட்டுந்தானா? எல்லா பொம்மணாட்டிக்கும் இப்படித்தானா?

காலத்தின் வெளியில் கனிந்து
காத்திருக்கும் சுடரொளி!

ஏற்றிய தீபச்சுடர் அணையும் வேளை காற்று அறியுமா! மோனச்சுடரின் வெம்மை . தனிமை, உண்மை, ஒளிரும் கண்கள், கன்னங்களின் மென்மை, சிவந்த கழுத்தின் நீல நரம்புகள், புறங்கழுத்தின் கூந்தல் சரிவு, மருளும் பார்வைகள்!! அவள் உள்ளுள் சென்றிட முடியுமா? அதன் வேட்கையை அறிந்திட இயலுமா?

தூக்கிக் கட்டிய கூந்தலும் கருமை பொங்கும் விழிகளுமாய் செந்து கதை சொல்லும் அழகே ரஞ்சியை ஈர்க்கும்.

அக்கா அப்பிடியே செலயாட்டம் இருப்பா. வராத ஊருல இந்தல்லாம் அவளக்கேட்டு வராங்க. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பூரிப்பு. உள்ளூரிலேயே காளியானுக்குக் குடுத்தாங்க. சரியா ரெண்டாம் மாசம் கெணத்துக்கு தண்ணியெடுக்கப்போன தங்கம்மா தவறி விழுந்து செத்துட்டா. படையல் வச்சு அடுத்த முகூர்தத்துல அவ தங்கை கெங்கம்மாவை காளியனுக்கு கட்டி வச்சாங்க. அப்பல்லாம் அப்படித்தான் வழக்கம். அவளாவது நல்லா இருக்கான்னு நெனச்சி பெத்தவங்க இருந்தப்ப அவளும் அதே கெணத்துல உழுந்துட்டான்னு தகவல் வருது.ஊரே அழுது மாளுது.

அந்த வருசம் கொடயில தெய்வம் வந்து ஒரு கன்னிப்பொண்ணு சொன்னப்பதான் எல்லாருக்கும் தெரியுது. “என் அப்பனே ஆத்தாவே சாதியே சனமே இந்த பூமாதேவி சாட்சி ஆகாச ராசா சாட்சி நெலா சாட்சி சூரியன் சாட்சி நான் பொண்ணாப் பொறந்து வளந்த இந்த ஊரிலயே வாழ்ந்தேன். கல்யாணங்கட்டுனவன் என்ன படுத்துன கொடுமைய தாள முடியாத நான் கெணத்துல உழுந்தேனே.. எந்தங்கச்சிய அவங்கிட்டயே குடுத்தீங்களே. அவளால தாள முடியுமா. பூஞ்சிட்டு மாதிரி பறந்துகிட்டிருந்தவ எப்பிடி தாங்குவா., அவளும் அந்த் கெணத்துலயேக் குளுந்துட்டா…. அவங்கள தான் நாம்ப அக்கா தங்கச்சியா கும்படறோம்.”

கேட்டுக்கொண்டிருந்த மகேசும் ரஞ்சனியும் அழுதிரிக்கிறார்கள்.

அக்காளும் தங்கையும் அவள் நினைவுகளில் வரத்தொடங்கிய போது கல்லாகியிருந்தாள். நிலவு பொழியும் இரவில் ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கையில் பார்த்த கூழாங்கற்கள். எத்தனை கோடைகளை மாரிக் காலங்களை வெள்ளங்களைப் பார்த்தவை அக்கற்கள். வெள்ளி ஒளியில் ஒவ்வொன்றும் ஒரு முழு நிலவாய்த் தோற்றப்பிழை. நீரில் ஆயிரம் நிலாக்கள். மூழ்கும் அவள் யௌனவம். கரையும் மேடுபள்ளங்கள். மழமழப்பு.

வாழ்க்கையின் பக்கங்கள் அவளுக்கு உவப்பானதாய் சிலதே. மற்றவையெல்லாம் கனவுகள். அவை பறப்பவை மூழ்குபவை; வழிந்தோடுபவை; உயிர் ஒடுங்க மலர்பவை; பிரபஞ்ச வெளியெங்கும் படர்ந்து கொய்பவை. பொன்னரளிப் பூக்களாய் சொரிபவை. இரவில் மலர்ந்து மயக்கும் செவ்வரியோடிய நித்யமல்லி இதழ்கள். செடி காணாது பூக்கும் காட்டு மலர்கள். மணல் எங்கும் படர்ந்து ஓடி விளையாடும் சமுத்திர அலைகள்.

பீன்ஸ் பருப்பும்,வெந்தயக் குழம்பும் பண்ணவா பிறந்தாள். முரண்கள் மோதல்கள் பேச்சுகள் சமாதானங்கள் … என்றும் முடியாது எனும் உச்சத்தில் மௌனியானாள்.
அவன் கண்ணன் பார்த்தன் மதுசூதனன் நந்தகோபன் காண்டீபன் ராதாமணாளன் வில்லேந்தும் விஜயன் சுபத்ராவின் மித்திரன். மனமெங்கும் நிறைபவன். அவள் கனவெளியில் கலவையாகி சிந்தையானவன். எண்ணங்களில் உயிர்ப்பவன். எப்பொழுதும் உடனிருந்து சகி என்று பிரியத்தில் உச்சி முகர்கிறான். செஞ்சாந்தும் செம்பகமும் கலந்து வீசும் புத்தம் நறுமணம் அவள் அனுபவங்கள். உயர்ந்து நிற்கும் மலைமுகட்டில் எவர் கண்களும் தீண்டாமல் தனித்து வளர்ந்து பரவி மணம் பரப்பும் சந்தன விருட்சம் அவள் அக உலகு. காயங்களில்லை சீண்டல்கள் இல்லை; சீறும் நாகங்களாய் எழும் பெருமூச்சுகள் இல்லை; அலங்காரங்கள் இல்லை; களைதல்கள் இல்லை…

உவகை உவப்பு பூரண சமர்ப்பணம் நினைவுகள் எண்ணங்கள் மட்டுமே செயல்களே அற்ற மோனம்..

பனியில் பாதி மலர்ந்திருக்கும் இதழ்களெங்கும் திவலைகள் வழியும் மஞ்சள் ரோஜா. மயக்கும் மணம் பரப்பும் பூத்துச் சொரியும் செவ்வலரிக் கொத்துகள் சுவர் இடுக்கில் தளதளவென வளர்ந்து தளிர்க்கும் ஆலஞ்செடி..

அவள் கனவுகளில் அவன் வரத்தொடங்கினான். பின் நிஜம் போன்ற நினைவுகளில். அவள் சிரித்தாள், மலர்ந்தாள், நாணினாள், முகம் சிவந்தாள். அவளைச் சிரிக்க வைத்தான்.

மழையில எதுக்கு நிக்கற பைத்தியமாட்டமா.எப்ப பாத்தாலும் என்ன சிரிப்பு.அர்த்தங்கெட்ட வேளையில என்ன பாட்டு. அதுவும் கண்ணீர் விட்டுக்கிட்டு, கொழந்தைகளை வெச எனக்கு கெட்ட வார்த்தை தான் வரும். தோசை வார்த்துக் கொடுத்தா கொறஞ்சிடுவையா.

கண்ணீர் கூட வருவதில்லை.பனி மட்டுமான வெண்மைப் பரப்பில் நின்று மேருவை பால் நிலவொளியில் பொன்னொளிர் காலைக் கதிரில் மயக்கும் நீலத்தில் தரிசிக்க ஏன் ஆசைகொண்டாள் சித்தி . அவள் மனதின் அகன்ற பரப்பு எதுவுமற்ற வெளி நான் நீ என்ற வேறுபாடின்றி எங்கும் நிறையும் முழுமை பூரணத்துவம் மட்டுமே வேண்டினாள்.

அவள் எண்ணங்களில் மகேஸ்வரியும் தங்கம்மாவும் கெங்கம்மாவும் சங்கமிக்கத் தொடங்கினார்கள்… காலங்காலமாய் பெண்மையாய், மலராய், பாறையாய் அவள் அமர்ந்திருக்கிறாள்.