கவிதை-பதாகை

stay updated via rss

RECENT POSTS
#t1kavithai – வைத்தீஸ்வரன்
#t1kavithai – மோனிகா மாறன்
Uncategorized
0
கலைந்த நினைவு

முடிவிலா தார்ச்சாலை
மௌனத்தை ரீங்கரிக்கும் வண்டுகள்
சலனமற்ற நீர்ப்பரப்பு
பனியில் ஒளிரும் நிலாக்கிரணங்கள
இதம்தேட வைக்கும் வாடை
முழு நிலவொளியிலும்
தன்னை வெளிப்படுத்தா நிழல்கள்

உயிர்த்துடிக்கும் உன் அழுகை
என் இயலாமை
உதிரம்…வலி…
உயிர்ப்பிண்டமாய்
என்னுள்ளிருந்து உன்னை
சுரண்டி எடுத்த அக்கணம்
மயக்க ஊசியை மீறித் திறக்கும் என் விழிகளில்
உதிரத்தில் பொதிந்த உயிர்ச்சதை

எந்த நொடியில் நீ தோன்றினாய் என் கருவறையில்
மூன்றாம் மகவாய்
உனைக் கருவருக்க
ஆயிரம் காரணங்களைக் கூறினோம்
என் சொல்வேன் பதில் நான்
உலகறியா உன் சுவாசத்திற்கு
நீ மகனா? மகளா?
அறியவில்லை
நிச்சயம் உணர்கிறேன்
பிறந்திருந்தால்
சாய்ந்திருப்பேன் என் இறுதிநாட்களில் உன் தோள்களில்
அறுத்தெரிந்தாலும்
மரணம் வரை எனைத்
தொடரத்தான் போகிறாய்
ஏன் அம்மா என்ற
ஒற்றைச் சொல்லுடன்
என் இரவுகள் கரையத்தான் வேண்டும்
உன் உன்மத்த நினைவுகளுடன்
இனி வருமா என் கனவுகளில்
கவிதைகளும்…மழலைகளும்

-மோனிகா மாறன் ( இங்கிருந்து )

இயற்கையை அறிதலுக்கும் அறிவியலை அறிதலுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அழிவாக மட்டுமே இருக்கிறது. எந்தச் சிறு கண்டுபிடிப்பும், மிகப்பெரிய அழிவிற்கான பாதையை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. கிடைக்கும் எல்லா ஆய்வு முடிவுகளையும் அழிவை உருவாக்குவதாகவும், அதன் மீதான பயத்தின் மூலம் நம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழியாகவும்தான் நாம் பார்க்கிறோம் என நினைக்கிறேன். எல்லா சிறு ஜன்னல்களையும் வீட்டை அழிக்கும் வாய்ப்பாக மாற்றுவதில்தான் நாம் வெற்றிகளை உணர்கிறோம். பயம் மட்டுமே நம்மை இணைக்கிறது. அழிவு மட்டுமே நம்மை பயமுறுத்துகிறது.

அதிகாரத்தின் ஆதிவேர் எக்காலத்திலும் பெண்ணின் கருவறையாகவே இருக்கிறது. அதைப்பாதுகாப்பதும், அழிப்பதுவுமே நம் போர்தந்திரமாக எப்பொழுதும் இருக்கிறது. கருவறை மீதான போர்களே நம் அடையாளமாக உருவாக்கிக்கொள்கிறோம். கருவில் அழித்தல் ஒரு வெற்றியாகக் கொண்டாடப்படும் காலத்தின் தானே நாம் இருக்கிறோம்? மதங்களும் ஜாதிகளின் புனிதமும் சென்று சேரும் இடம் கருவறையின் புனிதமென்ற ஒற்றைக் குறிக்கோளை நோக்கித்தானே? பயம் என்பதை அழிவுதான் குடுக்குமென்றால், கருவறையின் அழிவுதானே நம் அதிகாரப்போர்களின் ஆதிவேராக இருக்கிறது? அரசியலில்லாத தளத்தில்கூட இறந்த மனிதர்களைவிட இறந்த குழந்தைகளும் கருக்களும்தானே நம்மை பதட்டம் கொள்ளச் செய்கிறது?

இழந்த கரு என்பது தந்தைக்கு எதிர்பார்த்திருந்த ஒரு சொல் மட்டுமே. அந்த உயிரைக்குறித்த ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே. பெண் அறியும் அசைவுகளை ஆண்கள் ஒருபோதும் உணரமுடிவதே இல்லை. முழுக்க தனக்குள் அசைந்த ஒரு உயிரின் முதல் குரலைக் கேட்காமலே போவதென்பதைவிட பெரிய துயரம் என்ன நிகழ்ந்துவிடக்கூடும்? சுரண்டலில் நேரத்தில் எழும் வலிகுறித்த கதைகளை அருகிருந்து கேட்ட நியாபங்கள் மூளையின் எதாவது ஓரத்தில் இருக்கிறதா? பெண்ணைத்தவிர யார் பேசமுடியும் இந்த வலியை? யார் உணரமுடியும்? உணரமுடியாத, உணரவாய்ப்பற்ற ஒரு கதை வேடிக்கைபார்ப்பவனாக இருப்பதின் துயரம் உங்களுக்கும் தெரியும்தானே?

About these ads

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s