மாதங்களில் அவள் மார்கழி!

இறைவனே விரும்பும் மாதம் மார்கழி.பனியும்,குளிரும் இயற்கையும்சேர்ந்த மார்கழியைப் போன்றதே ஜவ்வாது மலை.மயக்கும் பேரெழிலாய் உயர்ந்த மரங்களும் படர்ந்த வெளியும் என் இள வயதின் மாறா நினைவுகள்.
உறை பனியும்.கொடுங்குளிரும் கொண்ட மேற்கத்திய நாடுகளில் அவர்களுக்கு வெயிலே மகிழ்வு,வசந்த காலத்தை எண்ணி ஏங்குவார்கள்.ஆனால் வெயில் உருக்கும் மண்ணிலுள்ள நமக்கு ஐப்பசியும் ,மார்கழியுமே குதூகலமானவை.என் மனதினை மயக்கும் பனியை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.