எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது

image

இந்த ஆண்டிற்கான தமிழின் சாகித்ய அகாடமி விருது ஆ.மாதவனுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் கடைத்தெருவை எழுதிய கலைஞன்.புனைவுகளில் யதார்த்த படைப்பை இயல்பாகக் கொண்டவை ஆ.மாதவனின் எழுத்துகள்.
கிருஷ்ணப் பருந்து
    

image

நுட்பமான மன ஓட்டங்களை ஆண் பெண் உறவுகளைச் சித்தரிக்கும் அழகிய நாவல்.குருஸ்வாமி,ராணி,வேலப்பன் ஆர்டிஸ்ட் என ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்நாவலின் நாகர்களே.இதில் இடம்பெரும் ஒரு ஓவியம் கூட கதாபாத்திரம் தான்.மனதை கரைக்கும் வட்டார மொழி நுட்பம்.

புணலும் மணலும்
  

image

ஆ.மாதவனின் மற்றுமொரு சிறந்த படைப்பு. புனைவின் அற்புத மொழி வடிவம் இந்நூல்.பங்கி எனும் அவலட்சணமான பெண்,அவள் தகப்பன்,தாமோதரன் ஆகயோரின் உளசஃசிக்கல்கள் உறவுகள் கடல் அருகில் வாழ்வு ஆறு மற்றும் சமகால மாற்றங்களைப் பற்றிய சிறந்த படைப்பு.

ஆ.மாதவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

மோனிகா மாறன்

Advertisements

திருப்பாவை பாசுரங்கள்-1

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி -ஆண்டாள் பாசுரம் -1

image

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆயர்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுத்தொழிலன் நந்தகோபன் குமரன்
I
ஏகாந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

ஆண்டாளின் சிறப்பு வழிந்தோடும் அருவி போல் இயல்பாய் பெருகி வரும் மொழி.கார்வண்ணன் மனமெங்கும் நிறைந்திருக்க தமிழால் அவள் பாடும் பாடல்கள் மார்கழி மாதத்தையே ரம்யமாக்குகின்றன.எத்தனை நூற்றாண்டுகள் கடந்நாலும் இளங்கன்னிகளின் மனம் இறைவனை வணங்கும் மனநிலை மாறாமல் இருப்பதை ஆணாடாளின் பாடல்கள் உணர்த்துகின்றன.மார்கழி மாதப் பனியில் குளிரில் கோலமிட்டு கண்ணனை எண்ணி வணங்கும் மனநிலை எத்தனை இனிமையானது என உணர்ந்தவர்க்கே தெரியும்.என் பால்யத்தில் சிறுமிகள் நாங்கள் முந்தின நாளே அவரை இலைகளைச் சேகரிப்போம். மார்கழிக் காலைகளில் வண்ணக்கோலங்கள் இட்டு அவரை இலையில் சாணம் வைத்து அதனுள் பூசணிப் பூக்களைச் சொருகி கோலத்தை அலங்கரிப்போம்.மண் அகலில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தீபம் எரிய கோலங்களும் பூசணிப் பூக்களுமாய் எழில்கொஞ்சிய மார்கழி மாதப் பனிக் காலைகள் நெஞ்சில் நிறைந்தவை.நகர வாழ்வில் அந்த நிறைவு இல்லாவிடினும் காலைப்பனியில் என்னுடன் கோலமிட்டு விளக்கேற்ற ஆசையாய் வரும் என் சிறு மகள்கள் எனக்கு இன்னமும் ஆண்டாளை நினைவூட்டுகிறார்கள்.பெண்மக்கள் எல்லாக் காலங்களிலும் உற்சாகச் சிறுமியரே

 

மோனிகா மாறன்